பக்கம்:கல்வி உளவியல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 291 19தர்ஸ்ட்டனின் கொள்கை : அண்மையில் தர்ஸ்ட்டன் என்பார் g கூறினப்பற்றி ஒரு புதிய கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் கருத் துப்படி அறிதிறன் என்பது தனித்திறன்கள் அல்லது முதல் திறன்கள் என்பவற்றின் வரிசையால் அமைக்கப்பெற்றது; மக்களுக்கிடையே அத் திறன்கள் வேறுபடுகின்றன. ஒரு தனியாளின் திறன்கள் தாழ்ந்த நேர் ஒப்புத் தொடர்புடையவை. இத்தொடர்பை g-போன்றதொரு பொது அறி திறன் கூறினைக்கொண்டு விளக்கினும் அமையும். மூலக்கூறு பாகு பாடு* என்னும் புள்ளிக்கணித முறையினை மேற்கொண்டு இந்தத் திறன்களைத் தனித்தனியே பகுத்துக்காணலாம். இவ்வாறு தனியே அளப்பதற்கு எடுத்த முயற்சியில் இன்னும் சரியான வெற்றியில்லை. தர்ஸ்ட்டன் குழுவினர் ஏறக்குறைய 12 திறன்களைப் பகுத்துக்கொண் டுள்ளனர். மேற்கண்டவாறு தொகுக்கப்பெற்ற முதல் திறமைகளின் வரிசை யை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. இன்னும் சில ஆய் வாளர்கள் இப்பன்னிரெண்டு திறன்களுடன் வேறு சில திறன்களைக் கூட் டியும் குறைத் தும் கூறுவர். எனினும், அறிஞர் பலரும் இம்மூலக்கூறு பாகுபாட்டால் அறிதிறன் மூலங்களைக் காண முயல்கின்றனர் என்பது வெளிப்படை. இம்முயற்சி இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. போதிய அளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெறவில்லை. ஆயினும், அறிதிறன் ஒரு தனி முழு அடக்கத்திறன் அன்று, அது ஒரு திறமைக் கோவையே என்பது மட்டிலும் அறியக்கிடக்கின்றது. அறிதிறன் ஈவு கிலையானது அறிதிறன் கிலேயானது என்பதுபற்றி கடந்த சில யாண்டுகளாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அறிதிறன் ஈவு கிலேயானது என்றும், சிறந்த ஆய்வுகளால் அறுதியிடப் பெற்ற அறிதிறன் ஆய்வுகளின் பூரணத்துவக் குறைவில்ை சிறிதளவு மாறக்கூடிய தென்றும், சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு தனியாளின் அறி திறனில் பிரதிபலிக்கக்கூடும் என்றும் பல்லாண்டுகளாகக் கருதப்பெற்று வந்தது. எடுத்துக்காட்டாக, அக்கொள்கைப்படி 100 அ. ஈ. உடையவர் பயிற்சி வாய்ப்புக்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்ற வற்ருல் 105 அ.ஈ. உடையவராக மாறலாம்; அல்லது உடல் கோயாலோ மன அதிர்ச்சியாலோ, வாய்ப்புக் குறைவாலோ 95 அ.ஈ. உடையவராக 1 osửsio-Lei -Thurstone. I o tipsossa-p ur SurG-factor analysis.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/313&oldid=778180" இலிருந்து மீள்விக்கப்பட்டது