பக்கம்:கல்வி உளவியல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கல்வி உளவியல் வும் ஆகலாம். சாதாரணமாக இதற்கு மேற்பட்ட மாறுபாடுகள் நிகழ் வதில்லை. ஆயினும், அண்மைக்காலத்தில் நாம் வியப்பெய்தக்கூடிய சில உண்மைகள் கண்டறியப்பெற்றிருக்கின்றன. முற்பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 600 குழந்தைகட்குக் கொடுக்கப்பெற்ற ஆய்வுகளினல் அறி திறன் ஈவு 20 வரையிலும் ஏற்றம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அங்ங்னமே, குறைமதியுடைய பெற்ருேருக்குப் பிறந்த குழந்தைகளை வளர்க்கும் விடுதிகளில் சேர்ந்து சில யாண்டுகட்குப் பிறகு சோதித்ததில் அவர்களுடைய சராசரி அ.ஈ. 116 ஆக இருப்பதைக் கண்டனர். இத் தகைய ஆராய்ச்சிகளினின்றும் அறிதிறன் ஈவு செளகர்யமான சூழ்நிலை களின் காரணமாக குறிப்பிடத்தக்க முறையில் மாறும் என்பது பெறப் படுகின்றது. ஆயினும், இச்சோதனை பற்றி உளவியலாரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருப்பதால், முடிவாக ஒன்றும் கூறுவதற் கில்லை, அறிதிறன் 15, 16 யாண்டுகட்கு மேல் வளர்வதில்லை, அங்ங்னமே நமது உயரமும் ஓயாது வளர்ந்துகொண்டு போவதில்லை. இக்காரணத்தா லேயே பல அறிதிறன் சோதனைகளில் 16-ஆம் யாண்டுக்கு மேல் விளுக் கள் கொடுக்கப்பெறவில்லை. சாதாரணமாக ஆண்களுக்கும் பெண்களுக் கும் அறிதிறனில் சிறந்த மாறுபாடுகள் இல்லை. ஆனல், குறிப்பிட்ட சில ஆண்கள் சில பெண்களைவிட அறிதிறன் மிக்கவராக இருக்கலாம்;அங் ங்னமே, சில பெண்களும் சில ஆண்களை விட அதிக அறிதிறன் படைத்த வர்களாக இருக்கலாம். அறிதிறன் ஈவின் மாறுமையை அறுதியிடும் கூறுகள்: அறிதிறன் ஈவின் மாருமையை விளக்க இரண்டு தற்காலிகக் கொள்கை யை கிறுவி ஆராயலாம். (i) அறிதிறன் ஈவு தனியாளின் சூழ்நிலைத்தன்மையைப் பொறுத் தது; சூழ்நிலை மாறதவரை அறிதிறன் ஈவு மாறது. (ii) அறிதிறன் ஈவு தனியாளின் குடிவழியைப் பொறுத்தது; பிறந்தபின் குடிவழி மாற முடியாதாதலின், அறிதிறன் ஈவு மாறுவ தில்லை. முதற் கொள்கை ஆராய்ச்சி : இதில் சூழ்நிலையை மாற்றிக் குடி வழிக்கூறுகளை மாருது அமைக்கவேண்டும். இதற்கு ஒரு கரு இரட்டைக் குழவிகளைப் பிறந்ததிலிருந்து பிரித்துப் பல வகையான வளர்ச்சி விடுதி 20 ஒரு கரு இரட்டைக் குழவிகள் - identical twins.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/314&oldid=778182" இலிருந்து மீள்விக்கப்பட்டது