பக்கம்:கல்வி உளவியல்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 293 களில் வைத்து ஆராய வேண்டும். இதில் அவ்விரட்டையரின் சூழ்நிலைத் தன்மையில் ஒப்புத்தொடர்பு காணமுடியாது. ஆகையால் சூழ்நிலைமாறி குடிவழி மாருது இருக்கும். போதுமான கால இடையீட்டிற்குப் பிறகு அக்குழவிகளைப் பல உள வியல் ஆய்வுகட்கும் அளவைகட்கும் உட்படுத்த வேண்டும். அவர்கள் பெறும் மதிப்பெண்களிலிருந்து அறிதிறன் ஈவுகளைக் கணக்கிட்டு இரண் டையும் ஒப்பிடுதல் வேண்டும். அறிதிறன் ஈவுகளிடையே உள்ள வேற். றுமை சூழ்நிலையின் வன்மையால் ஏற்பட்டவை. சில ஆராய்ச்சி களில் சிறிய வேற்றுமையே தோன்றுகின்றது. ஆளுல், மேற்கொள்ளப் பெற்ற ஆறு ஆராய்ச்சிகளில் ஒன்றில் மட்டிலும் 13 புள்ளிகள்' வரை வேற்றுமை காணப்பட்டது. இவ்வாராய்ச்சியிலிருந்து சூழ்நிலையால் அறி திறன் ஈவை ஓரளவு மாற்ற முடிந்த போதிலும், சூழ்நிலையின் எத்தகைய மாறுபாட்டாலும் பாதிக்காதபடி குடிவழி அறிதிறன் ஈவிற்கு ஒருமை அளிக்கிறதென்று தெரிகின்றது. இரண்டாவது கொள்கை ஆராய்ச்சி: இதில் சூழ்நிலையை மாரு மல் வைத்துக் குடிவழி நிலையை மட்டிலும் மாறும்படி செய்தல் வேண்டும். உண்மைக் குழந்தை, வளர்ப்புக்குழந்தை* ஒப்பு முறையில் மேற்கொள் ளப் பெற்ற ஆராய்ச்சியிலிருந்து இந்த முடிவுகள் பெறப்பட்டன. பொதுக் குடிவழி, பொதுச்சூழ்நிலையின்றியே ஒன்றுபட்ட அறிதிறன் ஈவு அளிக்க உதவுகின்றது. பொதுக் குடிவழியும் பொதுச்சூழ்நிலையும் சேர்ந்தால் இவ் வன்மை அதிகமாகின்றது. இவ்விரண்டுள் பொதுச் சூழ்நிலையின் பங்கு குறைந்ததாகவே காணப்பெறுகின்றது. அறிதிறனின் தனிக்கூறுகள் குடிவழி, சூழ்நிலை ஆகிய இரண்டைத் தவிர அறிதிறன் வளர்ச்சி யைப் பாதிக்கும் வேறு கூறுகளும் உள என்பதை உளவியலார் நன்கு அறிவர்; அறிதிறன் வளர்ச்சிக்கு வேறு பல சிறப்புக்கூறுகளும் துணை யாகவுள்ளன. மேலும், அறிதிறனேடு தொடர்பற்ற பல கூறுகளையும் மக்கள் அதனுடன் தொடர்புடையவை எனக் கருதுகின்றனர். அறிதிறனும் பிறப்பு வரிசையும் : முதற்பிள்ளைகள் த ம க் கு அடுத்துப் பிறக்கும் தம்பி, தங்கையரைவிடச் சற்று அறிதிறன் குறைக் தவர் என்று ஸ்டெக்கெல்?’ என்ற உளவியலறிஞர் கண்டார். அவர் 21 usirsfissir - points. 2 * sugrīāuš (Episcog - foster child. * 8 cool &Qāś - Steckel, M. A.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/315&oldid=778184" இலிருந்து மீள்விக்கப்பட்டது