பக்கம்:கல்வி உளவியல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கல்வி உளவியல் 5928 சகோதர இணைகளை ஆராய்ந்து இம்முடிவிற்கு வந்தார். ஆயினும், இவ்வேறுபாட்டிற்கு உயிரியல் அடிப்படையில் வேறுபாடு காண முடி யாதாதலின் இது சூழ்நிலையின் வன்மையினலேயே ஏற்பட்டிருக்கு வேண்டும். இளையபிள்ளைகட்கு மூத்தோரின் தூண்டலும் போட்டியும் உள்ளன ; முற்பிறந்தோருக்கு இவை இல்லை. எனினும், இங்கிலேயால் அறிதிறன் வேறுபாடு சிறிதளவே உள்ளது. பிறந்த மாதமும் அறிதிறனும் : நாம் பிறந்த நாளும் கோளும் கம் விதியைப் பாதிக்கின்றன என்று சோதிடர் கூறுவர். செப்டம்பர் மாதம் பிறந்தவர் மதிநுட்பமாயிருப்பர் என்றும், வெள்ளிக்கோளின் கீழ்ப் பிறந்த வர் வாழ்க்கையில் இன்பமும் மலர்ச்சியும் உடையராயிருப்பர் என்றும், சனியின் கீழ்ப் பிறந்தவர் மாறுபாடு, அழுக்காறு, தருக்கம் நிறைந்தவரா யிருப்பர் என்றும் கூறுவர். பிறந்த திங்களுக்கும் அறிதிறனுக்கும் உள்ள தொடர்பை ஆராயப் பலர் முனைந்தனர். பிறந்த திங்களாலும், காளா லும், கோளாலும் அறிதிறன் பாதிக்கப்பெறுகின்றது என்பதற்கு யாதொரு சான்றும் கிடைக்கவில்லை. மனித இனமும் அறிதிறனும் : மனித இனத்துள் ஓரினம்’* பிறி தோரினத்திலும் உயர்ந்தது என்னும் கொள்கை அமெரிக்க ஐக்கிய காட் டிலும் தனியாட்சி நாடுகளிலும் அதிகமாக விவாதிக்கப்பெறுகின்றது. அஃது உண்மையாயின் ஓரினத்தின் உயிர்மின்னிகள்’ சிறந்தவை என்ரு கின்றது. அறிவியல் அடிப்படையில் இவ்வுண்மை இன்னும் நிரூபிக்கப் பெறவில்லை. பெரும்பாலும் பொதுமக்களின் இத்தகைய பேச்சு பண் பாட்டு' வேற்றுமையின் அடிப்படையில் எழுந்ததாகும். ஓரினம் தன் னுடைய கலை, இலக்கியம், அறிவியல், தொழில், சமயம், பழக்க வழக் கங்கள், வாழ்க்கைத்தரம் முதலியவை பிறிதோரினத்தின் கலை முதலிய வற்றைவிட உயர்ந்தவை எனக் கருதுகின்றது. ஆயினும்,இனவேற்றுமை யால் இயற்கை அறிதிறன் மாறுகின்றதா என்ற பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்பெறவில்லை. ஆனல், உளவியலார் இவ்வேற்றுமைகள் பெரும்பாலும் சூழ்நிலையால்தான் ஏற்படவேண்டும் என்றும், சூழ்நிலையை ஒன்றுபடுத்தினுல் இவை நீங்கிவிடும் என்றும் கூறுகின்றனர். இதில் திட்டமான ஆராய்ச்சியொன்றுமின்மையில்ை, இதைப்பற்றி உறுதி யான முடிவு ஒன்றும் கூறுவதற்கில்லை. - பால்வேற்றுமையும் அறிதிறனும்: பண்டிருந்தே ஆண்கள் பெண் களைவிட அறிவில் சிறந்தவர்கள் என்ற தவருண கொள்கை எல்லா நாடு 24 இனம் - race. உயிர்மின்னி .gene. 28 பண்பாடு - culture.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/316&oldid=778186" இலிருந்து மீள்விக்கப்பட்டது