பக்கம்:கல்வி உளவியல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கல்வி உளவியல் புள்ளிக் கணிதம் தனியாள் வேற்றுமைகளை ஆராயுங்கால் உளவியலார் அளவறி அள வீடுகளைக் கையாளுகின்றனர். சோதனைகளுக்கு மதிப்பெண்கள் வழங் கப்பெறுகின்றன; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட எண் னிக்கையுள்ள அலகுகளில்99 தேர்ச்சியடைவதிலிருந்து கற்றல் தீர்மா னிக்கப்பெறுகின்றது; ஒரு புதிருக்கு விடை காண்பதற்கு ஏற்படும் கால அளவிலிருந்து புதிருக்குத் தீர்வு காணும் திறன் அறுதியிடப் பெறுகின் றது. ஒரு வகுப்பிலுள்ள பல்வேறு தனியாள்களிடமிருந்து பல்வேறு திறன்களைப்பற்றிச் சோதனைகளால் பெறும் மதிப்பெண்கள் போன்ற புள்ளிவிவரங்களின் வீச்சு மிக விரிந்த அளவில் இருக்கும். அதாவது இங்ங்னம் தனிமையாகக் கிடக்கும் எண்ணற்ற மாறுபட்ட தகவல்கள் ஒன்று சேர்த்துப் புரிந்து கொள்வது மானிட உள்ளத்திற்கு இயலாது. ஆகவே, இவ்விவரங்களைப் புள்ளியியல் முறைப்படி ஒழுங்குபடுத்தித் தொகுத்துப் பார்த்து அத்துறையிலுள்ள பல்வேறு யுக்தி முறைகளை மேற் கொண்டு அம்முடிவுகளுக்குப் பொருள் காணவேண்டும். புள்ளியியல் முறைகள் மிகச் சிக்கலான விவரங்களை எளிதாக்கிச் சீக்கிரம் ஒப்பிடத் துணை செய்கின்றன. குறைந்த விவரங்களைக் கொண்டு மனப் பண்புகளை மதிப்பிடுவது அரிதாதலின், ஓர் அளவு வரிசையை ஆராய்ந்து பொது நிலைமையை அறியலாம். - அன்ருட வாழ்க்கையில் புள்ளியியல் முறைப்படி கணக்கிட்ட கருத் துக்கள் பலவற்றை நாம் உணராமலேயே கையாளுகின்ருேம். வகுப்பில் மாளுக்கர்கள் பெறும் மதிப்பெண்களைப் பதிவேட்டில் பதிந்து சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடுகின்ருேம். சராசரி என்பது ஒரு முக்கிய மான புள்ளி அளவையாகும். இதன் பொருளை நாம் நன்குஅறிவோம். எடுத்துக்காட்டாக,ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்களா என்பதைக் கண்டறியச் சில ஆண்களையும் சில பெண்களையும் ஒப்பிடாது ஆண்களின் சராசரி அளவையையும் பெண்களின் சராசரி அளவையையும் ஒப்பிட வேண்டும். இங்ங்னமே மூளையின் அளவிற்கும் அறிதிறனுக்கும், அறி திறன் சோதனைகளுக்கும் பள்ளித் தேர்வுகளுக்கும், அறிதிறன் குறை வுக்கும் குற்றம் செய்வதற்கும் உள்ள தொடர்புகளை அறியப் பல சோதனைகளை மேற்கொண்டு அச்சோதனைகளில் கிடைக்கும் புள்ளி விவரங்களில் புள்ளிக்கணித முறைகளை மேற்கொண்டு கோவைப்படுத்தி 23 gystaaff gers#Gssir - quantitative measurements.

  • 9 3ịsò G - unit. 81 sĩởơ - range.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/320&oldid=778196" இலிருந்து மீள்விக்கப்பட்டது