பக்கம்:கல்வி உளவியல்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கல்வி உளவியல் ஒரு தனியாள் பண்புக்கூறுகளின் பரவல்” : மக்களை ஒருவ ரோடொருவர் ஒப்பிடுங்கால் தொகுதியோ வகையோ காணப்பெறுவ தில்லை என்பதை மேலே கண்டோம். இனி, ஒரே தனியாளின் பண்புக் கூறுகள் எவ்வாறு பரவியுள்ளன என்பதைச் சிறிது ஆராய்வோம். ஒரு தனியாளின் எல்லாத் திறன்களும் ஒரே அளவினவா ? சராசரி மனிதன் எல்லாப் பண்புகளிலும் சராசரியானவளு? ஒரு மனிதனின் அளக்கக் கூடிய அல்லது மதிப்பிடக்கூடிய எல்லாப் பண்புக் கூறுகளையும் அளக் தால் அவை யாவும் ஒரே கிலேயில், அளவில் இல்லாதிருப்பது தெரியும். பெரும்பான்மையானவை சராசரி கிலேயை ஒட்டியிருக்கும். சில சராசரி கிலையினின்றும் மிக உயர்ந்தவையாகவும், வேறு சில தாழ்ந்தவையாகவும் அமைந்திருக்கும். அஃதாவது, ஒவ்வொரு தனி யாளிடமும் ஆற்றல்கள், திறன்கள் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது. இந்த அளவுகளையும் வரைப்படத்தில் அமைத்தால் மேற்குறிப்பிட்ட வரைப்படம் போலவே அமையும். இதிலிருந்து வாழ்க்கையில் ஓர் உண்மையை அறியலாம். ஒரு செயலில் பெரு வெற்றியை அடைந்தவர் எல்லாச் செயல்களிலும் அதே அளவு வெற்றி பெறுதல் இயலாதது. அங் ங்னமே, தப்பான வேலையைத் தேர்ந்து அதில் தவறிய ஒருவர் வேருெரு வேலையில் சிறப்படையலாம். - பண்புக்கூறுகளின் இணைப்பு : ஒரு தனியாள் எல்லாத் திறன்களி லும் ஒரே அளவு உயர்வுடையவன் அல்ல என்று மேலே கண்டோம். ஆயின், இத்திறன்கள் எந்த அளவுக்கு ஒன்ருேடொன்று தொடர்புடை யவை பல திறன்களின் ஒப்புத் தொடர்புபற்றிய ஆராய்ச்சியிலிருந்து தனி மனிதரின் திறன்கள் கொத்துக்களாக அமைந்திருக்கின்றன என்று அறியக் கிடக்கின்றது. தம்முள் ஒன்ருேடொன்று தொடர்புற்று பிற தொகுதித் திறன்களோடு தொடர்பற்றுத் தோன்றுகின்ற திறத் தொகுதிகள் ஒரு கொத்தாகும். எடுத்துக்காட்டாக மொழித்திறன், கணிதத்திறன் போன்றவைகள் பல்வேறு சிறு திறன்களடங்கிய கொத் துக்களே. கணிதத் திறனும் அறிவியல் திறனும் ஓரளவு தொடர்புடை யவை. கணிதத் திறனும் விளையாட்டுத் திறனும் தொடர்புள்ளதாகக் கருதப்பெறுவதில்லை. இத்தகைய திறன்களின் கொத்துக்களின் எண் ணிக்கை எத்துணை என்பது இன்னும் தெரியவில்லை. 34 ustrų# G. glassir-traits. 35 ursusd-distribution. 38. கொத்துக்கள்-clusters.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/322&oldid=778200" இலிருந்து மீள்விக்கப்பட்டது