பக்கம்:கல்வி உளவியல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 301. தனிவேற்றுமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பப் பள்ளி நிரலை அமைத்தல் முற்காலத்தில் குழந்தை, பள்ளி வேலைத்திட்டத்திற்குத் தக்கவாறு தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆசிரியரும் பள்ளியும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இப்பொழுது கல்வி குழந்தையை நடு வாக வைத்து இயங்குகின்றது. குழந்தைகளின் தேவைகளையுணர்ந்து அவர்கட்கும் அவர்களின் தனி வேற்றுமைகளுக்கும் ஏற்றவாறு ஆசிரியர் பள்ளியையும் பாடத் திட்டங்களையும் பயிற்றும் முறைகளையும் மாற்றி யமைத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்காலக் கல்வியின் நோக்கம். "எல்லோரும் சமம் என எண்ணி கையாளப்பெறும் வகுப்புப் போதனை முறையில் இதற்குத் தக்க வாய்ப்புக்கள் இருக்க முடியாது. சராசரி மாளுக்கர்கள், முற்பாடானவர்கள், பிற்பாடானவர்கள் இவர்களுக் கேற்றவாறு கல்வி முறைகள் கையாளப்பெறுதல் வேண்டும். மக்களாட்சிக் கொள்கைப்படி மக்கள் யாவரும் சமமானவர்களே. ஆகையால் அரசினர் பொதுச் செலவில் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வி அளித்தல் வேண்டும். அவரவர்கள் அறிதிறனுக்கேற்றவாறு கல்விவகைகளையும் பெறுவதற்கு வாய்ப்புக்களை நல்குதல் வேண்டும். மக்கள் பண்புகள் யாவற்றிலும் வேற்றுமை இருப்பதுபோல் கற்கும் ஆற்றலிலும் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. ஒருவர் கல்வியால் நன்மை பெறக்கூடிய நிலைக்கு மேலாக அவருக்குக் கற்பிப்பது பயனற்ற தாகும். அறிதிறன் கற்றலுக்குப் பேரெல்ல.வகுக்கின்றது என்பது என் றும் நினைவில் இருத்தற்பாலது. மேல்நிலைக் கல்விக்கேற்ற மாளுக்கர் களைத் தேர்ந்தெடுப்பது இக்காலப் பிரச்சினைகளுள் பெரியதொன் ருகும். இன்றைய நிலையில் அனுபவ முறையில் ஏதோ செயல்கள் நடைபெற்றுத் தான் வருகின்றன; அரசினர் இதில் தனிக்கவனமும் செலுத்துகின்றனர். எனினும், இவை அறிவியல் அடிப்படையில் உளவியல் முறைப்படி நடைபெறுகின்றன என்று திட்டமாக உரைத்தற்கில்லை. அறிதிறனுக்கும் கற்கும் திறனுக்கும் உள்ள தொடர்பைப்பற்றி கொள்ளப் பெற்ற பல ஆராய்ச்சிகளிலிருந்து அறிதிறனுக்கும் கற்கும் திறனுக்கும் கல்வியின் எல்லா கிலைகளிலும் நேர் ஒப்புத் தொடர்பு உள்ள தென்று தெரிகின்றது. எனினும், இவ் ஒப்புத் தொடர்பு தொடக்க நிலைப் பள்ளிகளில் மிக அதிகமாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் சற்றுக் குறை 37 ஒப்புத் தொடர்பு-correlation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/323&oldid=778202" இலிருந்து மீள்விக்கப்பட்டது