பக்கம்:கல்வி உளவியல்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கல்வி உளவியல் வாகவும், கல்லூரியில் மிகத்தாழ்வாகவும் இருக்கின்றது. இவ் வேற்றுமை களுக்குப் பல காரணங்கள் உள்ளன. (1) தொடக்கநிலைப் பள்ளிகளின் குழந்தைகளுள் தனி வேற்றுமை யின் முழுப் பரப்பும் காணப்பெறுகின்றது. குழந்தைகள் வளர வளர அவர்கள் பல்வகைத் தேர்தலுக்குட்படுதலால் மந்த மாளுக்கர்கள் பள்ளியை விட்டு நீங்கி விடுகின்றனர். ஆகையால், மேல் வகுப்புக்களில் அறிதிறன் வேறுபாடு குறைவு. அதல்ை அறிதிறனும் வகுப்பு உயர்வும் ஒன்ருய் மாறும் வாய்ப்பு குறைகின்றது. அதல்ை அவற்றின் ஒப்புத் தொடர்பெண்ணும் குறைவு. (2) கல்வி உயர உயர, தனித் துறைகள் பெருகுகின்றன. எனவே, வெற்றி பெரும்பாலும் தனித்திறன்களாலும் சிறுபான்மை பொது அறிதிறனுலும் ஏற்படுகின்றது. (3) கீழ் வகுப்புக்களில் எல்லா மாளுக்கர்களுக்கும் வேலை நேரம் ஏறக்குறைய சமம். மேல் வகுப்புக்களில் ஒரு மாணுக்கன் இதனைத் தன் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகையால், அவன் அதிக நேரம் செலவழித்துக் குறைந்த திறனை அடையலாம். எனினும், அறிதிறன் வேறுபாட்டால் கற்றல் திறன் வேறுபடுகின்ற தென்றும், தேர்வுகள் இதனை யொட்டி நடைபெற வேண்டும் என்றும் நாம் அறிகின்ருேம். தனி வேற்றுமைக் கேற்ப முறைகளை அமைத்தல் : மாளுக்கர் கள் கற்கும் திறனில் வேறுபடுவது பள்ளிகளுக்கு ஒரு முக்கிய பிரச் சினையாகும். முற்பாடான மாளுக்கர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி களோ வேலைகளோ வகுப்புப் ப்ோதனையில் கிடைப்பதில்லை. அவர்கள் பொதுவாகக் கற்பிக்கப்பெறும் பாடங்களில் அக்கறை கொள்ளாது ஊக்கங் குன்றிச் சிறு குறும்புகள் செய்யத் தொடங்குவர். பிற்பாடான மாளுக்கர்களுக்குப் பொதுவாகக் கற்பிக்கப்பெறும் செய்திகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் தன்னம்பிக்கை குன்றி மனத்தளர்ச்சி அடைவர் ; நாணமும் பெறுவர் ; கற்கும் முயற்சியையும் கைவிடுவர். இந்தத் தனி வேற்றுமைப் பிரச்சினையைத் தீர்க்க இரண்டு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. ஒன்று. திறமையை அடிப்படையாகக் கொண்டு மாளுக்கர்களைப் பிரிவினை செய்தல் ; இரண்டு: செயலே அடிப்படையாகக் கொண்டு జిమిజు5&T அமைத்தல். முதல் முயற்சி : பல பள்ளிகளில் மணவயதைக் கொண்டு மானக் கர்களைப் பிரிக்கின்றனர். ஒரு போதனை வகுப்பில் ஏறக்குறைய ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/324&oldid=778204" இலிருந்து மீள்விக்கப்பட்டது