பக்கம்:கல்வி உளவியல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 303 மனவயதுள்ள மாளுக்கர்கள் அமைகின்றனர். இதல்ை மாளுக்கர் களின் மனத்திறன்களுக் கேற்ப ஆசிரியர் கற்பிக்கும் முறைகளை மேற் கொள்ள முடிகின்றது. இம் முறையில் நிறைமதியுள்ளவர்கள் பாடம் எளிதென எண்ணி சலிப்படைய மாட்டார்கள். குறைமதியுடையோரும் பாடம் கடினம் என எண்ணி விட்டு விடும் வாய்ப்புக்கள் இல்லை. மன வயது ஒற்றுமை, கற்றல் திறனில் ஒற்றுமையை அளிக்கிற தென்பது கட்டுப்படுத்திய சோதனை யொன்றலும் அறிகின்ருேம். ஆல்ை, மணவயதை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பிரிவு களை அடிக்கடி திருத்தி அமைக்க வேண்டும். காரணம், கால வயதில் வேறுபட்டு மனவயதில் ஒன்றுபட்டுள்ளவர்கள் ஒரேகால இடை யீட்டில் வெவ்வேருக வளர்கின்றனர். ஒரு யாண்டிற்குப் பின் இவர் களைச் சோதித்தால் மனவயதிலும் வேறுபடுவது தெரியும். காலம் செல்லச் செல்ல இவ்வேறுபாடு அதிகரிக்கும். திறமையை அடிப்படையாகக்கொண்டு மாளுக்கர்களைப் பிரித்த மைப்பதில் வேறு தீங்குகளும் நேரிடுகின்றன. தனி வேற்றுமை அதிக மாயிருப்பதால் அறிதிறன் மிக்க சிறுவன் ஒருவனை மந்த நிலையிலுள்ள பெரியவன் ஒருவளுேடு சேர்க்க நேரிடும். இதனுல் மனவயது ஒன்ருக இருப்பினும் உடல் நிலை, சமூக வளர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவற்றில் மிகவும் வேறுபட்ட தொகுதிகள் அமைகின்றன. அறி திறன் வேற்றுமைகளைப்போலவே இவையும் அளவுக்கு மீறிஞல் தீங் கிழைத்தல் கூடும். சில முறைகளில் வகுப்பு நிலைமைகளை ஒரு விதமாக வும், விளையாட்டு நிலைமைகளை இன்னெரு விதமாகவும் அமைத்து இவ் விடர்ப் பாட்டினைக் களைய முயல்கின்றனர். ஒரே வயதுள்ள மாணுக் கர்கள் ஒன்ருகக் கற்கின்றனர். ஒரே உள்ளக்கிளர்ச்சி வயதுள்ள மாளுக்கர்கள் ஒன்ருக விளையாடுகின்றனர். ஆயினும், இம் முறையிலும் ஒரு பெருங் குறை உண்டு. கல்வி திறம்பட அமைய வேண்டுமாயின் வகுப்பறையிலேயே சமூக எழுச்சி, அறிவு அனுபவங்கள் ஒருங்கே அளிக் கப்பெறுதல் வேண்டும். இரண்டாம் முயற்சி: மேற்கூறிய குறைகளை நீக்கவே இம் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. இம் முறையில் ஒரேவயதுள்ள மாணுக் கர்களை ஒன்ருக வகுப்பில் சேர்த்து அவரது அறிதிறன் வேற்றுமை களுக் கேற்பப் பல்வகைப் பாட ஒழுங்குகளையும் செயல்களையும் அமைத் தனர். பாடம் சிறு சிறு பகுதிகளாகவோ திட்டங்களாகவோ அமைக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு மாளுக்கனும் தன் கவர்ச்சிக்கும் வேகத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/325&oldid=778206" இலிருந்து மீள்விக்கப்பட்டது