பக்கம்:கல்வி உளவியல்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உடல் நலமும் உடல்நல வியலும் உடற் செயல்களும் உளச் செயல்களும் சூழ்நிலைக்குத் தக்கவாறு திருப்தியான முறையில் பொருத்தமுற்ருல்தான் உடல் நலம் செவ் வையாக இருப்பதற்கு அறிகுறி. உடல் நலம் என்பது உடலின் ஒரு கன்னிலை. அங்கிலையில் உடல் வன்மையும், ம்னத்திறனும் வாழ்க்கை யில் மனநிறைவும் ஏற்படுகின்றது. உடல் கலத்தால் வாழ்க்கையின் பயன் கிட்டுகின்றது ; அஃது ஆளுமையை வளர்த்துக் கவர்ச்சியைத் தரு கின்றது; தனியாளின் திறனை வளர்த்து வீட்டிலும் வாழ்க்கைத் துறை களிலும் வெற்றியுடன் செயலாற்றத் துணைசெய்கின்றது. உடல் நல வியல்’ என்பது உடல் நலத்தைக் காத்து அதனை வளர்க்கும் ஓர் அறிவியல் துறை, வாழ்க்கைக் கலை. அவ்வியலில் உள்ள கருத்துக்கள் யாவும் அறிவியல் அடிப்படையி லமைந்திருப்பதால் அஃது அறிவியலின்பாற் படுகின்றது; இந்தக் கருத்துக்களை அன்ருட வாழ்வில் திட்டமான முறையில் பயன்படுத்திச் செயல் திறன்களை வளர்ப் பதால் அது வாழ்க்கைக் கலையாகின்றது. உடல்நல வியலின் நோக்கம் வெறும் அறிவைப் புகட்டுவது மட்டுமன்று ; அது தனியாளைச் சிறந்த வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான செயலை மேற்கொள்ளப் பயிற்றலும் ஆகும். இதல்ை தனியாள் வாழ்நாள் முழுவதும் சிறந்த உடல் நலத்துடன் திகழ முடிகின்றது. உடலைப்பற்றி முடைக் குரம்பை புழுப் பிண்டம் என்று இழித்துக் கூறும் நூல்களும் உள்ளன; உடலின் உண்மை கிலையை உணர்ந்த திருமூலர் போன்ற யோகியர், உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ; திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார் ; உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே'. 1. உடல் கலம்-health. உடல்கல வியல்-hygiene, 3திருமந்திரம்-724, 725. க.உ.20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/327&oldid=778209" இலிருந்து மீள்விக்கப்பட்டது