பக்கம்:கல்வி உளவியல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கல்வி உளவியல் உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்; உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் ; உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே". என்று கூறி உடலோம்பலை உயர்த்திப் பேசியிருக்கின்றனர். அது கிடக்க, - குழந்தை, குமர உடல் நலவியல் சுவரை வைத்துக் கொண்டுதானே சித்திரம் எழுத வேண்டும் ? என்று நாம் கேள்வியுற்றிருக்கின்ருேம். குழந்தையின் உடல் நலமே கல்விக்கு முதல் அடிப்படை. குழந்தைகளும் குமரர்களும் தம்முடைய இயற்கை யறிவில்ை மட்டிலும் உடல் நலத்தைப் பெறமுடியாது ; நற் பழக்கங்களை அறிந்து கொள்ள இயலாது. அவர்களின் உடல் நல வாழ்வைப் பிறர் தொடங்கி வைக்க வேண்டும். ஒழுங்கான முறைப்படி அவர்கள் சில செயல்களைத் தவருமல் செய்துவர வேண்டும். இயற்கைக் கடன்கள், பல் தூய்மை, கண் தூய்மை போன்றவை முறைப்படி இயற்றப் பெறுதல் வேண்டும். மாளுக்கர்கள் இத்தகைய பழக்கங்களுக்குக் காரணம் வினவிஞல், ஆசிரியர்கள் அவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறுதல் வேண்டும். குமரப் பருவத்திலும் அதற்குச் சற்று முன்னரும் பால் உறுப்புக்களின் அமைப்பைப்பற்றியும், அவை செயற்படுவதுபற்றியும் மாணுக்கர் அறிய விரும்புவர். அவர்கள் விடுக்கும் விளுக்களுக்கு ஒளிப்பு மறைப் பின்றி உண்மையை மறைக்காமல், அல்லது மழுப்பாமல், தக்க முறையில் சரியான தகவல்களைத் தருதல் வேண்டும். உடல்நல வியல்பற்றிய கல்வி உடற் பயிற்சி, இயற்கை நூல், பள்ளியின் அன் ருட உடல் நலச் செயல்கள் ஆகியவற்றுடன் தொடர் புடையது. எனவே, அதைத் தனிப் பாடமாகப் பயிற்ருமல் சமூகப் பாடம் உட்படப் பிற பாடங்களுடன் இணைத்தே பயிற்ற வேண்டும். குழந்தை யின் உள்ளத்தில் உடல் கலத்தைப்பற்றிச் சீரிய மனப்பான்மை ஏற்படா விடில், உடல் நலத்தைப்பற்றிய கற்பழக்கங்கள் படியா. எனவே, உடல் கலத்தைப்பற்றிய கல்வியும் பயிற்சியும் தொடக்கத்திலிருந்தே பள்ளியின் அன்ருட வாழ்க்கைப் பகுதியாக அமைய வேண்டும். இவ்வாறு அமை யின், உடல் நலத்துடன் வாழும் வாழ்வால் தனக்கும், தன் தோழருக்கும்,

  • திருமக்திரம்-724, 725.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/328&oldid=778212" இலிருந்து மீள்விக்கப்பட்டது