பக்கம்:கல்வி உளவியல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 309 அரைச் செவிடு: சாதாரணமாக நாம் கேட்கும் மென் குரல்களைக் கேட்க இயலாமையை அரைச் செவிடு' என வழங்குகின் ருேம். இவர்கள் கேட்க வேண்டுமாயின் உரக்கப் பேசவேண்டும். பல செயல் களுக்கு இது பெருந்தடையானது. பெரும்பாலும் இஃது ஒரு தொழில்வாய் நோய் என்று கண்டறிந்திருக்கின்றனர். அஃதாவது இது தொழிலி லுள்ள வேலைகிலேகளால் அதிகம் உண்டாகின்றது. பொறிகளிலும் ஒலிமிக்க இடங்களிலும் தொழில் புரிபவர்கட்கு இவ்வகைச் செவிடு உண்டாகின்றது. இசைச் செவிடு : இசையின் ஏழு சுரங்களுக்கும் வேற்றுமை காண இயலாதவர்களை இசைச் செவிடர் என வழங்குவர். இசைக் கருவிகளை மீட்டுவதும் இனிமையாகப் பாடுவதும் இவர்களுக்கு இய லாது. ஆயினும், அரிய இசை நுட்பங்களைக் காணும் எஃகுச் செவியைப் படைத்தோர் இசைத்துறையில் வல்லவராவர் என்பதும் உண்மை யனறு. காது நோய்கள் : புறச்செவி, இடைச்செவி, உட்செவி ஆகிய மூன்று பகுதிகளிலும் நோய்கள் உண்டாகும். இவை காது நோய்கள் என வழங்கப்பெறும். இவையற்றிய விவரங்களையும் சிறிது அறிவோம். புறச்செவி மடலில் உண்டாகும் சாதாரண நோய்கள் கரப்பான்", கட்டி' ஆகியவை. புறச்செவிக் குழலில் குறும்பித்தடை, கொப்புளம், எலும்பு வளர்ச்சி முதலிய நோய்கள் உண்டாகும். செவிக்குழலில் குறும்பி எனப்படும் அழுக்கு தக்கைபோல்' இறுகி அடைத்துக்கொண்டு காது சரியாகக் கேளாது. சோடியம் பைகார்ப னேட் கரைசலைச் சற்று வெதுவெதுப்பான கிலேயில் பீச்சாங்குழலில்ை காதினுட் செலுத்திக் குறும்பியை நீக்க வேண்டும். இத்தகைய சிகிச் சைக்கு முன்னர் இரண்டு மூன்று இரவுகள் காதில் சிலதுளி ஹைடிர ஜென் பெர்ஆக்ஸைடை விட்டு வைப்பது நல்லது. சோற்றுப்புப்படிகம் ஒன்றைத் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண் ணெயை வெதுவெதுப்பான கிலேயில் ஊற்றலாம். இதல்ை கல்போல் கெட்டிப்பட்ட குறும்பி ஊறிவிடும். இதை எளிதாக நீக்கி விடலாம். காதுக்கொப்புளம் புறச்செவிக் குழலில் எழும். இதல்ை குத்தல் வலி அதிகமாக இருக்கும். இது கொடிய நோய் அன்று. ஏனெனில், е заогš Gledao - intensity of deafness. * Звонš assa6 - tone deafness. s sourg - eczema. 9 alo - boil. **śāos - Cork.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/331&oldid=778218" இலிருந்து மீள்விக்கப்பட்டது