பக்கம்:கல்வி உளவியல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 கல்வி உளவியல் தாடையில் அமைந்து விடுகின்றது. குழந்தை பிறந்த ஆருந் திங்களி லிருந்து இரண்டரை யாண்டுகட்குள் அவை முளைத்து விடுகின்றன. அவை பால் பற்கள்’’’ என வழங்கப் பெறும். ஒவ்வொரு தாடையிலும் உள்ள பால் பற்களில் 4 வெட்டும் பற்கள்"; 2 காய்ப் பற்கள் அல்லது கோரைப்பற்கள்_4 பின் கடைவாய்ப் பற்கள்’. பாற்பற்களின் மொத்த எண்ணிக்கை 20. குழந்தையின் ஏழாம் வயதிலிருந்து பன்னிரண்டாம் வயது முடி வதற்குள் இவை விழுந்து கிலத்த பற்கள்' முளைத்து விடுகின்றன. 14 வயதிற்குள் மொத்தம் 28 பற்கள் இருக்கும். நான்கு ஞானப் பற்கள்?? 25-ஆம் வயதிற்குள் தோன்றி விடும். எனவே, ஒவ்வொரு தாடையிலும் நிலைத்த பற்களில் 4 வெட்டும் பற்கள்; 2 நாய்ப் பற்கள், 4 முன் கடை வாய்ப்பற்கள் (பாற்பற்களில் இவை இல்லை); 6 பின்கடைவாய்ப் பற்கள். ஞானப் பற்கள், இறுதியில் குறிப்பிட்ட பின்கடைவாய்ப் பற்களில் அடங்கும். - х பற்களின் பாதுகாப்பு : பற்களுக்கு நோய் ஏற்படாது தடுத்தல் முதல் கிலே. ஒட்டிக்கொண்டிருக்கும் பாலாடை, உணவுத்துணுக்குகள் முதலியவற்றை நீக்குவதற்காகக் குழந்தையின் பல்லயும் வாய்ையும் அடிக்கடி கழுவுவது பெற்றேரின் கடமையாகும். உணவு உண்டபின் ஷான்யக் கொப்புளிக்கும் பழக்கத்தைச் சிறுவர்களிடம் அடிக்கடி வற் புறுத்த வேண்டும். உணவுத் துணுக்குகள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாக்கு, முறுக்கு போன்ற கடினமான பொருள்களைக் கடித்தால் பற்சிப்பி சேதம்டையும்; பற்சிப்பி மீண்டும் வளராது. சொர சொரப்பான பொருள்களைக் கொண்டு பல்லைத் தேய்த்தல் கூடாது. நல்ல பற்பசையைக் கொண்டு புருசால் பல் துலக்கு தல் நன்று. நல்ல மணமுள்ள பற்பொடியும் ஏற்றது. ஆருவேல், வேப்பங்குச்சிகளைக் கொண்டும் துலக்கலாம். பல் துல்க்குவதைப் பற்றிக் கூறும், வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல்துலங்கும் பூலுக்குப் போகம் பொலியுங்காண்- ஆலுக்குத் தண்டா மரையாளும் சாருவளே நாயுருவிக் கண்டால் வசிகரமாங் காண். 17 ursuñss - milk teeth. Isaac as uses - incissors. 1. கோரைப் பற்கள் - Canine Beeth , பின்கடைவாய் பற்கள் . molars. ** #&#5 Lisār - permanent teeth. 2 * (5m swir ußsir - wisdom teeth. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/334&oldid=778224" இலிருந்து மீள்விக்கப்பட்டது