பக்கம்:கல்வி உளவியல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 313 என்ற பழம் பாடல் இவண் சிந்தித்தற்குரியது. எவற்றைக் கொண்டு பல் துலக்கலாகாது என்பதைக் கூறும் ஒரு பழம் பாடலும் உண்டு. அது கல்லும் மணலும் கரியுடனே பாளைகளும் வல்லதொரு வைக்கோலும் வைத்துகிதம்-பல்ல தனைத் தேய்த்திடுவார் ஆமாயின் சேராளே சீதேவி வாய்த்திடுவள் மூதேவி வந்து.* சொத்தைப் பல் : சொத்தைப் பல் பிற்கால வாழ்க்கையில் உடல் நோய்கள் பலவற்றிற்கும் காரணமாகின்றது. பாற் பற்களில் சொத்தை ஏற்படுவது கிலைப்பல் சொத்தையைப்போல் அவ்வளவு அபாயமான தன்று. ஆனல், இங்கிலை ஏற்பட்டால் கிலைப்பற்கள் தோன்றியதும் அவை பாதிக்கப் பெறலாம். சொத்தைப் பற்கள் உண்டாவதற்கு நான்கு காரணங்கள் கூறப் பெறுகின்றன : (1) நாம் உண்ணும் உணவிலுள்ள சருக்கரைப் பொருள் களும் மாப் பொருள்களும் பற்களின் மேலும் அவற்றினிடையிலும் மெல் லிய திரைபோல் படிகின்றன. இந்தத் திரையின் மீது, முக்கியமாக இரவில், பாக்டீரியா தோன்றி வளர்ந்து அமிலங்களை உண்டாக்குகின்றன. இந்த அமிலங்கள் பற்சிப்பியைத் தாக்கி, அவற்றில் வெடிப்புக்களை உண் டாக்குகின்றன. இவ்வெடிப்புக்களின் வழியே நுண்கிருமிகள் நுழைந்து சொத்தையை உண்டாக்குகின்றன, (ii) சரியான முறைப்படி பல் துலக்கிப் பற்களைப் பாதுகாவாமை; (iii) குடிவழிநிலை; (iv) பல்லின் தவருண அமைப்பிலிருந்தே பல் சொத்தை தொடங்குவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல்லில் தந்தினி என்ற கடினக் கால் சியப் பொருள் சரியாக உருவாக்கப்பெறுவதில்லை. இதற்குக் காரணம் உணவில் விட்டமின் D இன்மையாகும். ஆகவே, உணவின் வகையை இதற்கேற்ப மாற்ற வேண்டும். குழந்தை சிறிதாக இருக்கும்பொழுதே உணவுச்சீர் குறைவைக் கவனிக்க வேண்டும். தகுந்த அளவு பால் கொடுப்பதாலும், மீன் எண் ணெய் கொடுப்பதாலும் இக்குறையைப் போக்கலாம். ஊட்டத் தேவைகள் நம்முடைய வாழ்க்கை நலத்திற்கு வேண்டிய கூறுகளில் முக்கிய மானது உணவு. உடலில் உணவுக்கு ஏற்படும் மாறுதல்களப்பற்றி 2 பதார்த்த குண சிந்தாமணி - செய்யுள் 1394, 1395.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/335&oldid=778226" இலிருந்து மீள்விக்கப்பட்டது