பக்கம்:கல்வி உளவியல்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கல்வி உளவியல் இதனுல்தான் சில உளவியலறிஞர்கள் உடற்களைப்பு, மனக்களைப்பு என்ற பாகுபாட்டை ஒப்புக்கொள்வதில்லை. ஆயினும், சிறிது களைப்பெய் திய ஒருவர் மனவேலையை நிறுத்தி உடல் வேலையைத் தொடங்கு வதனுலும் உடல் வேலையை விட்டு மனவேலையில் ஈடுபடுவதலுைம் ஓய்வு பெறலாம் என்பது அனுபவ சாத்தியமாகும். மனச் சோர்வுக்கும் காரணங்கள் தரப்பெறுகின்றன. தீவிரமான உள்ளக் கிளர்ச்சிகள் (வெறுப்பு, சினம், துயரம், ஏமாற்றம் போன்றவை), விருப்பமற்ற செயல் பிறரால் சுமத்தப் பெறல், ஒரே மாதிரியான வேலை (நீண்ட கூட்டல்கள், பெருக்கல்கள், நீண்ட சிந்தனை), தெளிவற்ற போதனை, தெளிந்த நோக்கமின்மை போன்றவை மனச்சோர்வுக்குக் காரணமாகின்றன. மனச்சோர்வு ஏற்பட்டால் நரம்புகள் சரியாகச் செயற்படா. கூடல் வாய்களில் எதிர்ப்பு ஏற்பட்டு நரம்புச் செய்திகள் விரைவாகச் செல்வ. தற்குத் தடை, பொறிகளின் வேலையில் குறைபாடுகள், கவனம் சிதறு தல், நினைவுக்குறைவு, சிந்தனையில் தடை போன்ற இடர்ப்பாடுகள் தோன்றும். மனச்சோர்வு ஏற்பட்ட மாளுக்கர்கள் வகுப்பில் கொட்டாவி விடுவர்; தூங்கியாடுவர்; பராக்குப் பார்ப்பர் சிறு குறும்புகள் விளப்பர்; அவர்கள் கவனம் ஒன்றிலும் நிலைத்து கில்லாது. இன்னெரு செய்தியையும் ஈண்டு கூறுதல் பொறுத்தமுடைத்து. உள்ளம் வேலை செய்யும்பொழுது உண்டாகும் களைப்பு உடல் வேலை சேய்யும்பொழுது உண்டாகும் களேப்பைவிடக் குறைவே என்று நுண் னிய கருவிகளைக்கொண்டு ஆராய்ந்து கண்டறிந்திருக்கின்றனர். (எ.டு) ஒரு பொருளை விளங்கிக் கொண்டு படிக்கும்பொழுது மூளை எவ்வளவு ஆற்றலைச் செலவிடுமோ அதைவிடப் பன்மடங்கு ஆற்றலை உடல் பொருள் கவனியாமல் தட்டச்ச வேலை செய்யும்பொழுது செலவிடு. கின்றது என்று கண்டுள்ளனர். ஆகவே, மூளைக்கு உண்டாகும் களைப்பு உடலுக்கு உண்டாகும் களைப்பைவிடக் குறைவேயாகும். செய்யும் தொழில் கவர்ச்சியுடையதாக இருக்குமாயின், மூளையும் எளிதில் களைப்படைந்து விடுவதில்லை. ஒரு பொருளைக் கவனிக்கும்பொழுது மூளை களைப்படையுமாயின், அதற்கு ஓய்வு தராமல் வேறு ஒரு பொருளைக் கவனிக்கும்படி செய்யலாம். அந்தப் பொருள் கவர்ச்சியுடையதாக இருந்தால் அதை மூளை சலிப்பின்றிக் கவ. னிக்கும். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/342&oldid=778241" இலிருந்து மீள்விக்கப்பட்டது