பக்கம்:கல்வி உளவியல்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 323 கவர்ச்சிகளிலேயே செலவிடுதல் வேண்டும். நன்முறையில் இதனைச் செலவிடுவற்கு நாம் நன்முறையில் ஈடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தன்-ஒழுங்கினைப் பொறுத்தது. பொழுதுபோக்கு என்பது அன்ருட வேலையிலிருந்து நம் செயல்களை வேறு வழிகளில் திருப்பி மகிழ்வடைதலாகும். Recreation என்ற ஆங்கி லச் சொல்லுக்குத் திரும்பவும் உண்டாக்கு என்பது பொருள். பொழுது போக்கில்தான் மனிதன் வேலையில் செலவிட்ட ஆற்றல்களைத் திரும்பவும் பெற்று வாழ்க்கையைத் துய்க்கும் பேறினப் பெறுகின்றன். நவீன. வாழ்க்கைக்கு கன்முறையில் பொருத்தமுற வேண்டுமாயின், பொழுது போக்கும் அன்ருட வாழ்க்கைத் திட்டத்தில் சேர்க்கப்பெறுதல் வேண்டும். பொழுதுபோக்குச் செயல்கள்தாம் மாளுக்கர்களிடம் வருந்திக் கற்பதற்கு வேண்டிய கிலேயினை உண்டாக்குகின்றன. பல்வேறு பொழுதுபோக்குச் செயல்கள் : பொழுதுபோக்குச் செயல்களில் பலவகை உண்டு. சிலவற்றில் தனியாள் பிறருடைய அருஞ்செயல்களை உற்று நோக்குகின்ருன் ; ஆனல், அதில் அவன் பங்கு கொள்வதில்லை; வேறு சிலவற்றில் தனியாளே பங்கு பெறுகின்றன். இரண்டுவகையிலும் நன்மை உண்டு; ஆளுல், நேரில் பங்கு பெறும் செயல்களால்தான் பெரும் பயன் உண்டு. எனவே, தனியாள் கண்டு களிப்பதைவிடப் பங்கு பெற்று மகிழ்வதே சிறந்தது. விளையாடுபவர்கள்தாம் சிறந்த பரிசில்களைப் பெறுகின்றனர். விளையாட்டுக்களில் பங்கு பெறுவதனுல் பொழுதுபோக்கும் கிடைக்கின்றது; உடற்பயிற்சியினையும் பெறுகின் ருேம். அன்றியும், அவை நம்முடைய ஆற்றல்களை வெளிவிட்டு வளரவும், கம்மிடம் மறைந்துகிடக்கும் திறன்கள் வெளிப்படவும் வாய்ப்புக்களை நல்குகின்றன. இன்னும் எத்தனையோ நற்பண்புகள் அமையவும் காரணமாகின்றன. நம்முடைய உள்ளக்கிளர்ச்சியின் துடிப்புக்களுக்கு அவை நன் முறையில் போக்குகளாக அமைகின்றன. வகுப்பினுள் சிறைப்பட்டுக் கிடக்கும் சிறுவர்கள் காலையிலும் மாலை யிலும் உள்ள இடைநேரத்தில் வெளியில் வருங்கால் மிகக் குதூகலமாக வருவதை நாம் பார்க்கத்தான் செய்கின்ருேம். பள்ளியில் சிறுவர்கள் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்காக ஈடுபடுவதற்கு வாய்ப்புக்களும் கருவி களும் இன்றியமையாதவை. உடல் உழைப்பிற்குப் பிறகு மனத்திற்கு வேலேயும், மன உழைப்பிற்குப் பிறகு உடலுக்கு வேலையுமாக ஏற்பாடு செய்தல் நலம். பலவிதமான சிறு விளையாட்டுக்கள், தோட்டவேலை, so so-sgie - self-discipline.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/345&oldid=778248" இலிருந்து மீள்விக்கப்பட்டது