பக்கம்:கல்வி உளவியல்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 325 உறவு பற்றிய அறிவு ஓரளவு அளிக்கப்பெறல்வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே (5 வயதில்) சிறுவர்கள், ' குழந்தைகள் எங்கிருந்து வருகின்றனர்?’ என்று வினவுவதை நாம் பார்க்காமல் இல்லை. தவிட்டுக்கு வாங்கினது, மருத்துவர் பையினின்று வெளிவந்தது என்பனபோன்ற பொய்யான கதைகளைக் கூறுவதால் நம்மிடமுள்ள கம்பிக்கை போய்விடும். பெற்ருேரே குழந்தை தாயின் வயிற்றில் வளர்ந்தது என்று வெளிப்படை யாகக் கூறிவிடுதல் சிறந்தது. குழந்தை பிறப்பதில் தந்தையின் பங்கினைப் பற்றி ஒன்பது அல்லது பத்து வயதுவரை சாதாரணமாக வினவப் பெறுவ தில்லை; ஆளுல், அவர்கள் வினவினுல், அதையும் ஒளிவுமறைவின்றிக் கூறிவிடுதல் சிறந்தது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேற்கூறிய தகவலேத் தருவதற்குப் பெற்ருேர்களே மிகவும் தகுதியு டையவர்கள்; பெற்ருேர்களைக் கலக்காது ஆசிரியர்கள் பால்-கல்வியைப் புகட்டுதல் கூடாது; நம் நாட்டைப் பொறுத்தமட்டிலும் எல்லாப் பெற்ருேர் களும் இதனைத் தருவதற்குத் தகுதிவுடையவர்களன்று என்று சொல்லத் தேவையில்லை. புகட்டும் முறை: பால்-வளர்ச்சியில் உடல் மாற்றங்களும் உள்ளக் கிளர்ச்சியற்றிய மாற்றங்களும் படிப்படியாக நிகழ்வதால், பால்-கல்வியும் படிப்படியாகவே தரப்பெறுதல் வேண்டும். குழந்தைகள் விடுக்கும் விளுக்களுக்கு மூடி மறைக்காமல் வெளிப்படையாக விடை தருதல் வேண்டும் என மேலே கூறினுேம். அந்த வயதில் அதற்கு மேல் அவர் வினவார். உயிரியல் பாடங்களிலும், தாவர இயல் பாடங்களிலும் இதற்குத் தக்க வாய்ப்புக்கள் நேரிடுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம்பற்றிய தகவல்களை உரைக்கும்பொழுது பால்-கல்வியும் கூடவே புகட்டப் பெறு கின்றது. மேல்நாடுகளில் பாலுணர்வுத் தகவல்கள் அடங்கிய சிறு புத்த கங்களைப் படிக்கச் செய்தும், பிறகு மாளுக்கர்களுடன் தனித்தனியாக உரையாடியும் இக்கல்வி புகட்டப்பெறுகின்றது. சில பள்ளிகளில் செல்லப் பிராணிகளை வளர்த்து அவை கலவி புரிவதையும், சூல் கொள் வதையும் காண வாய்ப்புத் தருகின்றனர். இம்முறையில் தரப்பெறும் பால்அறிவு சிறுவர்களின் மனத்தில் இயல்பாகப் படிந்துவிடுகின்றது. இதல்ை சிறுவர்களும் சிறுமியரும் குமரப் பருவத்தை எய்தும்பொழுது திடீரென அவர்களின் இனப்பெருக்க உறுப்புக்களில் நிகழும் மாற்றங் களும் பிறவும் அவர்களைத் திடுக்கிடச் செய்வதில்லை; திகைப்பையும் துயரத்தையும் உண்டாக்குவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/347&oldid=778252" இலிருந்து மீள்விக்கப்பட்டது