பக்கம்:கல்வி உளவியல்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கல்வி உளவியல் மேற்கூறிய இனப்பெருக்கம்பற்றிய தகவல்களைத் தவிர, குமரப்பரு வத்தில் தம்மிடையே நிகழும் மாறுபாடுகளையும் ஒவ்வொரு சிறுவரும் சிறுமியரும் அறிந்துகொள்ளவேண்டும். (i) குமரப்பருவத்தில் சிறுவன் பக்குவம் அடையும்பொழுது விரை களில் முற்றிய கிலேயெய்திய விந்து இரவில் துயிலும்பொழுது வெளிப் படுவதுண்டு. இஃது இயல்பாக நிகழ்வது; இதல்ை யாதொரு விபத்தும் இல்லை. சிறுவனுக்கு இதுபற்றிய அறிவு புகட்டாவிடில், அவன் மட்டரக மான விளம்பரங்களைப் படித்து, அதனுல் விணுன மனத் தொல்லைகளை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு விந்து வெளிப்படுதல் ஒரு வாரம் முதல் ஆறு வாரங்கள் வரை உள்ள இடைக்காலங்களில் நிகழலாம். இஃது அடிக்கடியும் தொடர்ந்தும் நிகழ்ந்தால், மருத்துவரைக் கலந்து ஆலோ சிக்க வேண்டும். (ii) குமரப் பருவத்தில் சிறுமிகளிடம் முக்கியமாகத் தோன்றும் நிகழ்ச்சி பூப்படைதல் ஆகும். இதைப்பற்றிய முழு விவரங்களையும் திங் கள் தோறும் 28 நாட்களுக்கொருமுறை ஏற்படும் மாதவிடாய்பற்றியும் சிறுமிகளுக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் பிள்ளைப்பெறும் பருவத்தை எய்தி விட்டார்கள் என்பதைத் தெளிவுறுத்தவேண்டும். பால்-கல்வி தருவதைப்பற்றிய கருத்து வேற்றுமை : பால்-கல்வி தருவதைப்பற்றிக் கருத்து வேற்றுமைகள் உள்ளன. சிலர் பால்.கல்வி வேண்டும் என்றும், சிலர் அறவே கூடாது என்றும் வாதிக்கின்றனர். தேவை என்பார் கூறுவது : இந்த நவீன காலத்தில் முற்றிலும் பழைய எண்ணங்களே நிலவ வேண்டும் என்று கினைப்பது சரியன்று. இன்றைய இளைஞர்கள் படக்காட்சிகள், புதினங்கள் செய்தித்தாள்கள் ஆபாசமான விளம்பரங்கள் முதலியவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட வர்கள். இவற்ருல் பாலைப்பற்றியே தவருண எண்ணங்களைப் பெறக் கூடும். இதை அவசியம் தடுக்க வேண்டும். ஆண்பாலாரும் பெண்பாலாரும் வாழ்க்கைக்குத் தக்க முறையில் பொருத்தப்பாடு அடையவேண்டுமாயின் பாலைப்பற்றிய சரியான அறிவு அவர்கள் பெற்றிருக்கவேண்டும். எதிர்பால்பற்றியஅறிவை மறைபோல் இருக்கச் செய்வதால் பல இடையூறுகள் விளைகின்றன. தேவையன்று என்பார் கூறுவது : காதலுக்கம் மிக வலியது; அபாயகரமானது. இதைச் சிறுவர், சிறுமியர் அடக்கி வைப்பது நலம். 5 suo strip - novel.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/348&oldid=778254" இலிருந்து மீள்விக்கப்பட்டது