பக்கம்:கல்வி உளவியல்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இயல்பு பிறழ்ந்த நடத்தை வாழ்க்கை என்பது சமூக, பெளதிகச் சூழ்நிலைகளின் மாற்றங்களுக் கேற்பவும் தனியாளின் உடல், மனநிலைகளின் மாற்றங்களுக் கேற்பவும், சதா மாறிக்கொண்டிருக்கும் இக்கூறுகளின் உறவு முறைகளுக் கேற்பவும் நடைபெற்று வரும் தொடர்ந்த பொருத்தப்பாடு என்பதை நாம் அறிவோம். பொருத்தப்பாடு என்பது தொடர்ந்து நடை பெறுவது ; அது மிகவும் சிக்கலானது. அது தனியாளின் ஆளுமை யில் ஒரு தனித்த கூறினே மட்டிலும் பொறுத்ததன்று ; அது தனியாளி டம் ஊடாடிக்கொண்டிருக்கும் பல்வேறு கூறுகளின் ஒழுங்குபாட்டைப் பொறுத்தது. ஒரே விதமான நிலைமைகளில் பல்வேறு தனியாட்கள் பல் வேறு விதமாகப் பொருத்தப்பா டடைகின்றனர்; விளைவில் பல்வேறு பொருத்தப்பாடுகள் வேறுபடுகின்றன. பலனற்ற முறைகளில் பொருத் தப்பா டடைவதை உளவியலார் 'பிறழ்வான பொருத்தப்பாடு' என்று வழங்குவர்; அங்ங்னம் அடையவர்கள் பிறழ்வான பொருத்தப்பாடுடை யவர்கள்’ எனப்படுபவர். சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தையைப் பொது வாக "இயல்பு பிறழ்ந்த கடத்தை’ என்று வழங்குவர் உளவியலார்.” இவ்வுலகில் நமது மனப்பான்மையை அளவுகோலாகக் கொண்டு எல்லாச் செயல்களையும் அளத்தல் இயல்பு. நமது மனத்திற்கு ஒத்த வற்றை இயல்பானவை என்றும், ஒவ்வாதவற்றை இயல்பு பிறழ்ந்தவை என்றும் கூறுகின்ருேம். இதன் காரணமாகவே பித்தர்கள் பிறரைப் பித்தர்கள் என்றும், தாம் சாதாரணமானவர்கள் என்றும் கருதுகின்றனர். இயல்பானவை இன்னவை என்பதுபற்றிய அளவுகோல் அகவய மானது"; அது குழுவிற்குக் குழு, நாட்டிற்கு நாடு, காலத்திற்குக்காலம் மாறுபடுகின்றது. க்ல்லிவர் என்பான் குள்ளர்களின் நாட்டை யடைந்த 1 பிறழ்வான பொருத்தப்பாடு-mal-adjustment 2 பிறழ்வான பொருத்தப் பாடுடையவர்கள்-the-mal-adjusted. 3 இயல்பு பிறழ்ந்த நடத்தை-abnormal behaviour. 4 அகவய-subjective.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/350&oldid=1420175" இலிருந்து மீள்விக்கப்பட்டது