பக்கம்:கல்வி உளவியல்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 33抄 எல்லாவற்றையும் தாமே செய்து தருகின்றனர். மற்ருென்றில் பெற்ருே អ៊ិនធុំ பணிதல் மீதுர்ந்து கிற்கும். இத்தகைய பெற்றேர்கள் குழந்தையை மனம்போல் நடக்க விடுவர்; குழந்தைக்கு அவன் கேட்பவற்றையெல் லாம் தருவர். இவர்கள் அவனது முதிராத தீர்மானத்தால் வரும் விளைவு களினின்றும் அவனைக் காக்கின்றனர். இந்த இரண்டு வகைப் பாதுகாப் பும் குழந்தையிடம் போராட்டங்கள் எழச் செய்கின்றன. முதலாண்டு களில் போராட்டத்தின் அறிகுறிகள் தோன்றும். இக்குழந்தை பிற குழவிகளிடம் சமூகத் தொடர்பைத் தொடங்கும்பொழுதும், பள்ளிக்கு முதன் முதலாகச் செல்லும்பொழுதும் துன்பம் தொடங்கலாம். பெற்றேர் செல்லங் கொடுத்து வளர்ந்த இக்குழந்தையிடம் சுயேச் சையான மனப்பான்மையே வளர இடமில்லை. முரட்டுத்தனம் வளர லாம். பிறரைச் சார்ந்திருத்தல்' இவனிடம் குடிகொண்டு விடும். இவன் ஒருநாளும் பொறுப்பேற்க விரும்புவதில்லை. பெரியவனை பிறகும் தாயோ பாட்டியோ தனக்கு எண்ணெய் தேய்த்துவிட விரும்புவான். கடின வேலையினின்றும் பின் வாங்குவான். என்றைக்கும் சிறு குழந்தையாகவே இருந்துவிடுவான். (iii) பெற்ருேரின் பிறழ்ச்சி:-குடும்பத்தில் வாழும் பல குழவி களும் தம் பெற்ருேர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து செல்லக் குழவி களாகவே வாழ முயலுகின்றன. இவ்வாறு போட்டியிடும் குழவிகள் தமக்குள்ளே ஒன்றற்கொன்று உதவி அன்பு பூண்டு ஒழுகின், இத் தகைய போட்டியால் நன்மையே விளையும். எனினும், இந்நாளைய உல கின் கேடு அனைத்தும் போட்டியினலேயே விளைந்துள்ளது. ஆதலின் புத் துலக அமைப்பில் கூட்டுறவை நிலைநாட்ட முயல்வோர் இத்தகைய போட்டியாம் முட்செடியை இளமையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். ஒரு குழவியைப் பெற்ருேர் செல்லமாக வளர்க்கும் பொழுது பிற குழவிகள் பொருமை அடைகின்றன. புதியதொரு குழவி பிறந்ததும் தாயின் நாட்டம் அனைத்தினையும் அது கவர்வது கண்டு முந் திய குழவி வயிறு எரிந்து போகின்றது. செல்லக் குழவியோடு போட்டி யிடும்போது தன் கீழ்மையை எண்ணி மற்றைய குழவி வாடி அக்கீழ்மை கிலையை நீக்கிக்கொள்வதும் உண்டு. இவ்வாறு பொருமைபட்டுப் போட்டிபோடும் குழவிகளோடு மறைமுகமாகவே பெற்ருே.ரிடமிருந்து வேண்டியவற்றை யெல்லாம் பெற்று வாழ அச்செல்லக் குழவிகளும் பழகி விடுகின்றன. ஆனல், பெற்ருேர் நடுகிலை பூண்டு வருவார்க surfisa -submission. smogásá-dependence,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/353&oldid=778266" இலிருந்து மீள்விக்கப்பட்டது