பக்கம்:கல்வி உளவியல்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 கல்வி உளவியல் ளானல், தம்பியோ தங்கையோ பிறக்குந்தோறும் மூத்த குழவி பொரு மைப்படாது. குழவியின் உலகினக் குடும்பத்தின் அளவாகவே குறுக்கி விடாமல் படிப்படியாக வயதிற்கு ஏற்பப் பரந்து அகன்று வருமாறு செய்து, வெளி உலகினும் அம் மூத்த குழவிகள் ஈடுபடுமாறு பழக்கி விடு தல் வேண்டும். அவ்வாறு பழக்கி விட்டால் பொருமை எண்ணங்கள் தோன்றுவதற்கே இடமில்லாது போகும். சில சமயம் தாய் ஒரு குழவியை யும், தந்தை ஒரு குழவியையும் செல்லமாக வளர்த்து வருவதும் உண்டு. இது கண்டு பிற குழவிகள் மனம் எரிந்து நிற்கின்றன. ஒரு குடும்பத்தில் அன்பு பெற்ற குழந்தையும் அன்புபெருத குழந்தையும் பாக்கியமற்ற வர்களே. அதிக அன்பு பெற்ற குழந்தை மேலே குறிப்பிட்ட அதிகச் செல்லம் கொஞ்சப்பெற்ற குழந்தை போலாகும். சலுகை பெருத குழந்தையிடம் பொருமை யுண்டாகும். நியாயமின்மையுணர்ச்சியாலும் தகுந்த அன்பை இழந்தமையாலும் இதனிடம் போரிடும் மனப்பான்மை வளரும்; அது பெற்றேரிடத்திலும் பிறரிடத்திலும் காட்டவும் பெறும். இக்குழந்தை மன வன்மையை இழந்து போவதும் உண்டு. எனவே, பெற்ருேள்கள் இத்தகைய பிறழ்ச்சி தம்மிடம் நிலவாது பார்த்துக் கொள்ள வேண்டும். இம்மாதிரி சலுகை இழந்த குழந்தைகட்கு ஆசிரியர்களாவது அன்பு காட்டவேண்டும். (iv) சரியான தொடர்பின்மை : சில குடும்பங்களில் பெற் ருேர்களுக்கும் குழந்தைகட்கும் சரியான தொடர்பே இருப்பதில்லை. இதல்ை குழவிகள் மிகவும் வருந்தக்கூடும். பெற்ருேர்கள் விரும்பாத குழவிகளும் உள்ளன. இக்குழந்தைகள் அன்பு பெருவிடினும், பெற்றேர்களின் கவனத்தைப் பெறமுயலுவர். அன்பு காட்டாதவர்களை எதிர்ப்பர்; அவர்கட்குத் தொல்லைகள் தருவர். பொய் சொல்லும் குணம் இவர்களிடம் இயல்பாகக் காணப்பெறும். இவர்கள் புரட்சிக் காரர்களாகவும், வலுச்சண்டைக்காரர்களாகவும் வளர்வர். சதா பிறருக்கு எரிச்சலேயே விளைவிப்பர். - (v) உயர்ந்த அறநெறிநிலை : சில பெற்ருேர்கள் சமயக்குருக்கள் போன்று தம் குழவிகளிடம் உயர்ந்த அறநெறிகளைப் புகட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். முதியோரது நெறிமுறைகளையெல்லாம் குழந்தைகளிடம் புகட்டவேண்டும் என்று சதா துடித்துக்கொண்டே யிருப்பர். “இது தவறு, அது தவறு : விளையாடக்கூடாது ; சீட் டாடக்கூடாது ; படக்காட்சிக்குப் போகலாகாது ; பெண்களுடன் பேசக் கூடாது ' என்பன போன்ற கடுமையான அறநெறி நிலையை வற்புறுத்திக்கொண்டே யிருப்பர். இத்தகைய குழவிகளிடம் பயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/354&oldid=778268" இலிருந்து மீள்விக்கப்பட்டது