பக்கம்:கல்வி உளவியல்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 333 வளரும். அதிகக் கட்டுப்பாட்டால் மனக்கோளாறுகளும் ஏற்படலாம்: புரட்சி மனப்பான்மையும் தோன்ற ஏதுவுண்டு. கட்டுப்பாடே கூடாது என்பது நம் கருத்தன்று ; அது வேண்டும். கட்டுப்பாடு அளவோடு இருத்தல் வேண்டும் என்பதே நம் கட்சி. (wi) வறுமை : குடும்பத்தின் வறுமையும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதித்து, சரியான ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பசிப்பிணியால் வாடும் குழந்தை பிறருடன் நன்கு பழகாது; பழகவே தயங்கும். கிழிந்த காற்சட்டை, கந்தலான மேற்சட்டை, அழுக்குடன் கூடிய ஆடைகள், உடைந்த கற்பலகை, கிழிந்த புத்தகம் ஆகியவற்றுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நாம் நாடோறும் காணத்தான் செய்கின் ருேம். தம் பெற்ருேர்க்குத் துணையாக வீட்டிலோ, தோட்டத்திலோ, கழனியிலோ அலுவல்களை முடித்துவிட்டு அவசர அவசரமாக நேரங்தவறி வருபவர்களின் எண் ணிக்கை சிறிதன்று ; காட்டுப்புறங்களிலுள்ள பள்ளிகளில் இது சர்வ சாதாரணம். இவர்கள் வீட்டிலோ படிக்க விளக்கு இராது ; காற் ருேட்ட வசதி இராது ; போதுமான உணவுக்கும் வழி இல்லை : அந்த உணவும் தகுந்ததாக இராது. புத்தகங்கள் வாங்கவும் பொருளாதார கிலை இடங்கொடுப்பதில்லை. பள்ளி வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கொடுமையைச் சொல்லி முடியாது. இது கருதியே வள்ளுவப் பெருந்தகையும், பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் ருங்கு.' (பொச்சாப்பு-மறதி; கிரப்பு-வறுமை) என்று கூறிப் போந்தார். இக்குறளில் வறுமையின் கொடுமை உவமை யாக கிழலுவதைக் காண்க. இங்கிலைகளையெல்லாம் நன்கு உணர்ந்தே இல வசக் கல்வி, இலவசப் புத்தகம், இலவசக் கற்பலகை, பகல் உணவு போன்ற திட்டங்களை அரசினர் ஏற்படுத்தியுள்ளனர். சில யாண்டுக ளாக அத்திட்டம் நன்கு நடைபெற்றுவருவது மிகவும் பாராட்டத்தக்கது. இனி, பள்ளிச்சூழலில் நடத்தைப் பிறழ்வு நேரிடக் கூடிய காரணங் களைக் காண்போம், பள்ளிப் பழக்க வழக்கங்களின் விளைவுகள் தேர்வுகள் : இன்றைய உலகில் மிகவும் கேடு விளைவிப்பது வரம்பிகந்த போட்டி மனப்பான்மை யாகும். பள்ளிகளில் காணப் 10 குறள்-532.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/355&oldid=778270" இலிருந்து மீள்விக்கப்பட்டது