பக்கம்:கல்வி உளவியல்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 335 ஒவ்வாத பாடத்திட்டம் : ஒவ்வாத பாடத்திட்டத்தாலும் மாணுக் கர்களின் மனநலம் கெடும். பள்ளியின் பாடத்திட்டம் குழந்தை களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையொட்டி அமையாவிடினும், அவர்களின் தற்போதைய தேவைகட்கு இணங்கியிராவிடினும், பல தீய விளைவுகள் உண்டாகும். எடுததுக்காட்டாக பள்ளி எதிர்ப்பு, தீய நடத்தை, பள்ளியை விட்டு ஓடல், சிறு குறும்புகள் போன்றவை. அவற்றுள் சில. மதி நுட்பமுடைய பல நெறிபிறழ்ந்த இளைஞர்கள் பாடத்திட்டத்தால் ஏற்பட்ட சலிப்பு மிகுதியாலும், திருடுவதால் உண் டாகும் உள்ளக்கிளர்ச்சியைத் துய்க்க விரும்பியும் அதில் ஈடுபட்ட தாக ஓர் ஆராய்ச்சியின் முடிவால் அறியக்கிடக்கின்றது. தங்கள் திறமைக்கு மீறிய பாடங்களை வற்புறுத்திக் கற்பிக்கப்பெறும் மாளுக் கர்களின் கிலையும் இத்தகையதாகவே முடியும். குருவித் தலையில் பனங் காயைக் கட்டுவது போன்ற செயலல்லவா இது? மாளுக்கர் முன்வைக்கப் பெறும் பாடங்களைப் பயில்வதில் அவர்கட்கு நம்பிக்கையும் ஆர்வ மும் இருத்தல் வேண்டும்; தகுந்த அளவுக்கு வெற்றியும் தோல்வியும் கலந்து ஏற்பட்டால்தான் மானுக்கர்கள் தம் எழுச்சி வெளியீட்டைப் பலன் தரும் நடத்தைக் கோலங்களாக ஒருமைப்படுத்தும் திறனைப் பெறுதல் இயலும். வகுப்பறையில் அளவிறந்த கட்டுப்பாடு: பல தொடக்கநிலைப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் குழந்தைகளின் நடத்தையை அதிகமாகக் கட்டுப்படுத்துகின்றனர். குழந்தைகளை அவரவர் இடங்களில் அசை வற்று, செயலற்று இருக்க எதிர்பார்க்கின்றனர். பள்ளிப் பாடவேளைப் பட்டிப்படி வழக்கமாகத் தரப்பெறும் இடை வேலையும், இடை இடையே அளிக்கப்பெறும் கரும்பலகை வேலையும் துருதுருவென இருக்கும் குழந்தைகளின் இயக்கச் செயல் - தேவைகளுக்குப் போதுமானதல்ல. மேலும், விளையாட அனுமதிக்கும் பொழுதும் அவர்கள் விருப்பப்படி விளையாடவிடாமல் ஆசிரியர்கள் குறுக்கிடுகின் றனர். இவற்றைப் பெற்றேரும் ஆசிரியரும் சிந்தித்தல் இன்றியமையா தது. வளரும் சிறு குழந்தைகளின் நரம்புத் தினவுக் கேற்றவாறு இயக்க வேலைகள் இன்றியமையாதவை. ஆதாரக் கல்வி ஓரளவு இதனை நிறை வேற்றுகின்றது என்று சொல்லப்பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/357&oldid=778274" இலிருந்து மீள்விக்கப்பட்டது