பக்கம்:கல்வி உளவியல்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கல்வி உளவியல் தனித்த பொருத்தப்பாட்டுப் பிரச்சினைகள் வாய்ந்த குழந்தைகள் - சூழ்நிலையுடன் சரியான முறையில் பொருத்தப்பா டடைய முடியாத குழந்தைகளும் உள்ளனர். அவர்களுள் சில முக்கிய வகைகளை ஈண்டு ஆராய்வாம். உடற்குறையுடையவர்கள்: இத்தகைய குழவிகள் அதிகமாக இடர்ப்பாடுகளுக் குள்ளாகின்றனர். பிற குழவிகளைப்போல் விளையாட்டுச் செயல்களிலும், வேறு சமூகச் செயல்களிலும் சரியான முறையில் இவர் களால் பங்குபெற முடிகின்றதில்லை. பாடவேலையிலும் இவர்கள் மெதுவா கவே உள்ளனர். இவர்கள் ஆசிரியர்களாலும் உடன் பயில்வோராலும் பாராட்டப் பெறுவதில்லை. மேலும், எதிர்காலத்தில் மன நிறைவு தரக் கூடியதொரு தொழிலை இவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். தன்னம் பிக்கை இவர்களிடம் நல்ல முறையில் வளரவாய்ப்புக்கள் இல்லை. இவர் களது உடற் குறைபாடுகளின் காரணமாகப் பெற்றேர்களும் , ஆசிரியர் களும் இவர்கட்கு அதிகமான பாதுகாப்பையும் அளிப்பர். இதன் பயனுக இவ்வகைக் குழவிகளிடம் தன்னுணர்ச்சி, மிக்குணர்ச்சி, அச்சம், தாழ் வுணர்ச்சி போன்றவை காணப்பெறுகின்றன. இவர்கள் கடினமான நிலைமைகளே எதிர்த்துச் சமாளிக்க முற்படாமலும், பிறருடன் லந்து கொள்ளாமலும் ஒதுங்கிப் பின்வாங்குவர். ஆனால், இவர்களுடன் சற்று முன் யோசனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொண்டால் இவர் களை நன்முறையில் வளர்க்கலாம். இவர்களுடைய இயற்கைக் குறை. களைக் கூடியவரை வெளிப்படையாகக் கவனிக்காமல், அவர்களிடம் அமைந்து கிடக்கும் வேறு ஆற்றில்களைப் பாராட்டும்படியான முறைகளை அமைத்தால் அவர்களிடம் உற்சாகம் தோன்றி அவர்கள் ஓரளவு பொருத் தப்பாடு அடைவதற்குரிய வாய்ப்புக்களைப் பெறுவர். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் : அடிக்கடி பல்வேறு நோய் வாய்ப்படும் குழந்தைகளும் மேற்குறிப்பிட்டவகைக் குழவிகளைப்போலவே பள்ளி வேலைகளிலும் விளையாட்டுக்களிலும் பிற்பட்டவர்களாகவே. காணப்படுகின்றனர். இவர்கள் எளிதில் களப்பு அடைகின்றனர். இதல்ை பிறர் இவர்களைச் சோம்பர்கள் எனக் கருதவும் இடம் ஏற்படும் நோய்களின் காரணமாகவும், வீட்டில் அவர்கட்குப் பெற்ருேர்களும் பிறரும் அதிகமாக இடம் கொடுப்பதாலும் அவர்கள் எளிதில் சினங் கொள்ளக்கூடியவர்களாக இருப்பர். கடுமையான கோயின் காரணமாக பள்ளிக்கு நீண்டநாள் வரமுடியாதபொழுதெல்லாம் தாம் இழந்த பாடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/358&oldid=778276" இலிருந்து மீள்விக்கப்பட்டது