பக்கம்:கல்வி உளவியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 15 உளவியலார் பண்டைநாள்தொட்டுக் கையாளுவது அகக் காட்சி யாகும். பண்டை நாளில் அஃதொன்றே முறையாய் விளங்கியது. அகக்காட்சி என்பது ஒருவர் தம்முடைய மனத்தின் செயலையோ அனுப வத்தையோ உள் நோக்கித் தெரிந்துகொள்ளுதலாகும். உள்ளத்தின் செயல்கள் தனித்தனியே ஒவ்வொருவருக்கும் உரியவை. ஆதலின், பிறரால் அவற்றை எளிதில் அறிய இயலாது. அவரவர்களே தமது மன கிலையை வெளியிட்டால்மட்டுமே நாம் அறிதல் கூடும். அவ்வாறு எடுத்துரைக்க வேண்டுமாயின் அவ் வுள்ளச் செயல் நிகழ்ந்தவுடனேயே, அவர்கள் அவற்றை உள் நோக்கிக் காண்டல் வேண்டும். உள் நோக்கி ஆராய்வது என்பது சற்றுக் கடினமே. மேலும், உள்ளத்தின் கிலேகளும் செயல்களும் மாறிக்கொண்டே போகும் இயல்புடையவை; அவற்றைச் சரியாகக் கவனிப்பது எளிதன்று. தவிர விலங்குகள், குழவிகள், பித்தர்கள், காட்டுமிருண்டிகள் போல் முன்னேற்ற மடையாதவர்கள் ஆகியோ ரின் உள்ளத்தைப்பற்றிய செய்திகளே அகக் காட்சியால் அறிய முடி யாது , வருணிக்கவும் இயலாது. இன்னும் ஓர் இடர்ப்பாடும் உண்டு. சினம், இன்பம் போன்ற உள்ளத்தின் செயல்களை விருப்பு வெறுப்பின்றி யும் திட்டமாகவும் உற்று நோக்குவதென்பது அருமையினும் அருமை. வெகுண்டு விழும்பொழுது வெகுளிவரும் வழியை உற்று நோக்கில்ை வெகுளி மறைந்தன் ருே ஓடும் ! இது காணும் கண்களேயே காண முயல் வது போலாகுமன் ருே ? இம் முறையில் உள்ளத்தின் நிலையை ஆராய முயலுதல் இருளை ஆராய மின் விளக்கை ஏற்றுதல் போலாகும் என்கிருர் ஒரு பெரியார். ஆனல், இம் முறை எளிதன்ருயினும், அசாத்தியம் அன்று. உள்ளத்தின் செயல் கடந்து கொண்டிருக்கும்போதே, அஃதா வது அதன் இயல்பு மாறுவதற்கு முன், அதை நினைவு கூர்ந்து அதன் இயல்பை அறியலாம். ஆகவே, அகக்காட்சி யனைத்தும் பின்ளுேக் கம் 4% ஆகும். உணவை உண்டு உவப்பதைவிட அதனைக் கண்டு களிப்பதற்கு ஈது ஒப்பாகும். எனினும், பயிற்சியாலும் பழக்கத்தாலும் இம் முறையின் திறனை மிகுதிப்படுத்தலாம். பல உள்ளகிலைகளைப்பற்றி வேறு வகையில் அறிய இயலாமையின் இம் முறையையும் நாம் மேற் கொள்ளுகின்ருேம். - - சில உளவியலார் பெளதிகம் போன்ற பிற நூல்களிலுள்ளதைப் போல் புறக் காட்சியையும் கையாளுகின்றனர். இக் காரணத்தால் உள்வியல் அண்மைக்காலத்தில் விரிவடைந்துள்ளது. உள்ளம் உட லுடன் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பதால் உள்ளச் செயல்கள் 46 orogośsib-retrospection.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/36&oldid=778282" இலிருந்து மீள்விக்கப்பட்டது