பக்கம்:கல்வி உளவியல்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கல்வி உளவியல் மீத்திறம் பெற்ற குழவிகள் மீத்திறம் பெற்ற" குழவிகளும் ஆசிரியர்கட்குப் பல பிரச்சினைகளைத் தருபவர்கள். இவர்களும் எளிதில் பொருத்தப்பா டடைவதில்லை. ஆசிரியர்கள் இக்குழந்தை களின் திறனையும் உயர்வையும் மதியாததால், இவர்கள் பள்ளியிடமும் ஆசிரியர்களிடமும் எதிர்ப்பு மனப்பான்மையைக்கொள்ளுகின்றனர். பெற் ருேர்கள் இக்குழவிகளின் உயர்வைக் கருதாமையால், இவர்கள் தூண்டல்கள் குறைவுற்று மனந்தளர்கின்றனர். அறிதிறன் மிக்கிருப்பு தால் உடன் பயில்வோரிடமும் பொருத்தப்பா டடைவதில் இடர்ப்பாடு உண்டாகின்றது. வகுப்பு வேலைகளில் இவர்களுடைய ஆற்றலுக் கேற்ற துண்டல்களின்மையால், ஊக்கங்குறைந்து மட்டமான வேலைப்பழக்கங் களும் இவர்களிடம் உண்டாகின்றன. தகுந்தவழி காட்டப்பெருமையால் இவர்களிடம் குறுகலானவையும், கோணலானவையும், விரும்பத்தகாத வையுமான கவர்ச்சிகள் ஏற்படுகின்றன. சமூகம் இவர்களுடைய கவர்ச்சிகளையும் செயல்களையும் பாராட்டாமையால், இவர்களிடம் சில சமயம் தாழ்வுணர்ச்சி தோன்றி வளர்கின்றது. சில சமயம் வீண் செருக்கும் ஏற்படுகின்றது. முதியோரின் மிகைப் பாராட்டினல் செருக்கும் பீடும் வாய்ந்த ஆளுமை இவர்களிடம் வளர்கின்றது. இயல் பான சமூகச் செயல்களின்மையால், ஆளுமையின் ஒரு சார்பான வளர்ச்சி ஏற்படுகின்றது. இவர்கட்குத் தனிப்பள்ளிக்கூடங்களும் தனி வகுப்புக்களும் அமைத் தல் நன்று நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை. இவர்களது அறிவுநிலைக் கேற்ற அதிக வேலை, உயர்ந்த வேலை, இவை இரண்டும் கலந்த வேலை கொடுக்கலாம். சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு தாளுகச் செய்யக்கூடிய வேலைகளையும் தரலாம். இவர்களுக்கெனத் தனிப் பாடத்திட்டம் வகுத்து, கற்பித்தால் நற்பயன் விளையும்; கட்ை முறையில் இதுவும் சாத்தியப்படுவதில்லை. இவர்கள் செய்த வேலையை அவ்வப்பொழுது தனித்த முறையில் தணிக்கை செய்து உற்சாகப்படுத் தில்ை நன்முறையில் பொருத்தப்பாடு அடைவர். மந்தக் குழவிகள்: இவர்களது அறிதிறன் ஈவின் தாழ்வெல்லை 75; உயர்வெல்லை.90. இவர்கள் பள்ளிகளில் அடையும் இடர்ப்பாடுகள் இவ் வளவு அவ்வளவு அன்று. சாதாரணப் படிப்பின்* கடினம், அங்கு எதிர் பார்க்கப் பெறும் வேகம் இவர்களிடம் இன்மை, இவர்களுடைய ஆற்றல் 1 * (5;&pú Quñp-gifted. **u figă (5p335ir-dull children. 1.4 Loto-reading.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/360&oldid=778284" இலிருந்து மீள்விக்கப்பட்டது