பக்கம்:கல்வி உளவியல்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 339 களே வெளியிட வாய்ப்புக்களின்மை போன்றவை இவர்கட்கு ஏமாற் றத்தை அளிக்கின்றன. அத்துடன் இவர்கள் உடன்பயில்வோரின் ஏன னத்திற்கும் துன்புறுத்தலுக்கும் இலக்காகின்றனர். இத்தனையும் போதா தென்று சில சமயம் ஆசிரியர்களும் இவர்கள் தம் வகுப்பின் கிலேயைத் தாழ்த்திவிட்டதாகக் குறைகூறும்பொழுது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன் ருகி விடுகின்றது. இதல்ை ஆளுமை வளர்ச்சிக்குப் பழுது ஏற்பட்டு பிறழ்வான கடத்தையும் உண்டாகும். தோல்விமனப் பான்மையும் குழப்பமும் நேரிடலாம். பொய், திருட்டு, எதிர்ப்புபோன்ற வகைகளில் இவர்கள் ஈடு செய்து கொள்வது இயல்பே. பள்ளியின் மீதும் சமூகத்தின் மீதும் இவர்கள் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவர். இன்றைய வகுப்பு முறைக் கற்றலில் இந்த மாணுக்கர்கள் நீந்தவோ மூழ்கவோ விடப்படுகின்றனர் பெரும்பாலும் மூழ்கியே விடுகின்றனர். மந்தத் தன்மையற்றி நாம் கொண்டுள்ள கருத்தும் சரியன்று. கை வேலைகளிலோ, ஓவியம் வரைதலிலோ, இசையறிவிலோ குறைவாயிருப் பவர்களை மந்தர்கள் என்று நாம் சொல்வதில்லை; ஆனால், புத்தகப்படிப்பில் குறைவாகவுள்ளவர்களை மந்தர்கள் என வழங்குகின்ருேம். காரணம், அறிவுக்கூறினே முக்கியமாய்க் கொள்வது வழக்கமாய்விட்டது. மந்தக் குழவிகளும் தம் ஆற்றலுக்கேற்றவாறு சமூகத்திற்குப் பயன்படுவர் என் பதை ஆசிரியர்கள் அறிவதுடன், அவர்களிடமும் அம்மனப்பான்மையை நிலவச் செய்தல் வேண்டும். இன்றைய கல்விக் கொள்கை இதனைத் தான் அதிகமாக வற்புறுத்துகின்றது. வண்ண வேலை, நடித்தல், ஓவியம் தீட்டல், நூல் நூற்றல், நெசவு வேலை, தோட்ட வேலை, இசை போன்ற படைப்பு வேலைகளிலும், விளையாட்டுக்களிலும் வாய்ப்புக்களை கல்கி அவர்களது விடுதலை யுணர்ச்சியைத் தடுக்காதிருந்தால், அவர்கள் முன்னேற்றம் அடைவர்; தக்க முறையில் பொருத்தப்பாடும் எய்துவர். இவர்களைப்பற்றி குறைகூறலாகாது.ஓவ்வொருவருடைய மனநிலையையும் நன்கறிந்து தனித்த முறையில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பினை ஒரு பழுவான வேலைபோல் தோன்ருமல் பொழுதுபோக்காகத் தோன்றும் படி நிலைமைகளை உண்டாக்கவேண்டும். வாய்ப்பாடு, எழுத்துக்கூட்டல், படிப்பு போன்றவற்றில் குறைகளிருப்பின், தக்க முறையில் பயிற்சி யளித்து மேற்படிக் குற்ைகளைக் களைதல் வேண்டும். மந்தத் தன்மை பிறவிக் குணமா, அன்றி குழந்தைப்பருவ வளர்ச்சி யின் பயன என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னது காரண மாயின், பரிகாரம் இல்லை ; பின்னது காரணமாயின், ஓரளவு பரிகாரம் உண்டு. அறிதிறன் ஈவு யாதென்றும், எல்லாப்பாடங்களிலும் மந்தமr,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/361&oldid=778286" இலிருந்து மீள்விக்கப்பட்டது