பக்கம்:கல்வி உளவியல்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342. கல்வி உளவியல் எடுக்குமாறு விட்டுவிடுவர். ஒரு புதிய்ச் செயலை மேற்கொள்ளும் பொழு தெல்லாம், அவர்கள் அதிலுள்ள அபாய நிலைகளையும் தொல்லைகளையுமே எடுத்துக்காட்டுவர்; வெற்றியைவிடத் தோல்வியையே அதிகமாக வற் புறுத்திப் பேசுவர். தம்மிடம் குறையொன்றும் இல்லாதிருக்கும்பொழுதே குறையிருப்பதாகக் கருதுவதே இவர்களிடம் அமைந்த கேடு பயக்கும் பண்பு. கிறைமதியுள்ள குழவிகள் தம்மை மந்தகிலே யுள்ளவர்கள் என் றும், உண்மையில் நல் நடத்தையுள்ள குழவிகள் தாம் தீய நடத்தையுள்ள வர்கள் என்றும் எண்ணலாம். தாழ்வுணர்ச்சியின் காரணமாகக் குழந் தைகளிடம் தன்னம்பிக்கைக் குறைவுள்ளமையைப் பெற்ருேர்களும் ஆசிரியர்களும் அன்ருட வாழ்க்கையில் அடிக்கடி காணும் சாதாரண அனுபவமாகும். - நெறிபிறழ்வின் சிறப்பியல்புகள் நெறிபிறழ்ந்த குழந்தைகள் : பொதுவாக இவர்கள் நகர்ப் புறங் களின் 'கெட்டப் பகுதிகளிலேயே காணப்பெறுவர். பழங்காலத்தில் நெறி பிறழ்வு என்பது அறவழி விட்டு நடக்கும் நடத்தையே என்று கருதப்பெற்றது. நாளடைவில் கெறிபிறழ்வுக்குப் பலவித காரணங்கள் அறியப்பெற்றன. இவை ஆளுமையின, சூழ்நிலையின என இரண்டு. பிரிவில் அடங்கும். ஆல்ை, இவை தனித்தனியாகச் செயற்படுவன அன்று; இரண்டும் ஒன்ருேடொன்று பிணைந்தவை; ஒன்றையொன்று மாற்றுபவை. மனிதனுக்குப் பாதுகாவல், அன்பு, மதிப்பு போன்ற பல தேவைகள் உள. அவை நிறைவு பெருவிடில், கிறைவுபெறுவதற்காக வேறு வழிகளை நாடுவான். குடும்பத்திலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும் குறைகளால் ஆளுமை வளர்ச்சி தடை பட்டு நெறிபிறழ்வு தோன்றும். இதனுடன் அறிவுக்குறையும் சேர்ந்து குழந்தையைத் தன் தவருன செயல்களால் நேரிடும் விளைவுகளைப்பற்றிச் சிந்திக்காமல் செய்து வரு கின்றது. இவை ஆளுமைப்ற்றியவை. சூழ்நிலைபற்றியவைகளில்பெற் ருேர் சச்சரவு, மணமுறிவின் காரணமாகவோ, சிறை சென்றதாலோ அல்லது ஒருவரை யொருவர் கைவிட்டதாலோ ஒருவரை யொருவர் பிரிந்து வாழ்தல், குடி, ஒழுக்கத்தவறு, வறுமை, வேலையில்லாதிருத்தல், மாற்ருந்தாய் அல்லது மாற்ருந்தந்தையின் கொடுமை, விரும்பாமல்ஈன்று புறக்கணித்தல் போன்ற வீட்டுநிலைமைகளும், பள்ளிகளில் கற்றவையும், அக்கம் பக்கத்து நிலைமைகளும் பயிலும் விளையாட்டுக்களும், சேர்ந்த தோழமையும் அடங்கும். 18 நெறிபிறழ்வு - delinquency.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/364&oldid=778292" இலிருந்து மீள்விக்கப்பட்டது