பக்கம்:கல்வி உளவியல்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கல்வி உளவியல் வகுக்கின்றனர். தம்மைத் தடைசெய்பவர்களையும் திட்டுகின்றனர். இறுதியாக சிருர் நீதி மன்றத்திற்கும் திருத்தப்பள்ளிகட்கும் கொண்டு வரப்பெறுகின்றனர். இங்கும் அவர்கள் திருந்துவதில்லை ; இவர்கள் வளர்ந்து மனிதர்களாகி மேலும் பல தீச் செயல்கள்புரிந்து சிறை செல்கின்றனர். நெறி பிறழ்ந்தவர்கள் தம் தவறுக்காக வருந்துவதில்லை; தாம் பிடி பட்டதற்காகவே வருந்துகின்றனர். வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தீய நெறியில் நெஞ்சு உரம் பெறுகின்றது. கட்டுப்பாடு அதிகமாக ஆக அவர்கள் நடத்தை மேலும் கெடுகின்றது. தற்போதைய கிலேமைகளுடன் போராடுவதால் அவர்களது தற்பெருமைக்கு மனநிறைவு ஏற்படுகின்றது. தம்முடைய நெறிபிறழ்ந்த வாழ்க்கையைக் கைவிட்டால் தாம் கோழை யாகிவிடுவோம் என்ற உணர்ச்சி அவர்கள் மனத்தில் எழுகின்றது. தம் முடைய குற்றச் செயல்களால் அவர்கள் உள்ளம் மகிழ்ந்து தற்புகழ் எய்துகின்றனர். அப்படி இல்லாவிட்டால், அவர்களால் இத்தீய வாழ்க் கையைத் தொடர்ந்து நடத்த முடியாது. இவர்களின் உள்ளக் கிளர்ச்சி யின் சீர்குலேவேக பல்வேறு வித நெறி பிறழ்ந்த நடத்தைகளாகப் பரிணமிக்கின்றது. சிலரிடம் இது மடிமையையும் கவனக்குறைவையும் உண்டாக்கி அதனுல் பிற்போக்குத் தன்மையை விளைவிக்கும் ; வேறு சிலரிடம் அஃது உடல் ஆட்சியின்மையை உண்டாக்கி இயக்கக் குறை வினை விளைவிக்கும்; இன்னும் சிலரிடம் அது சமூக விரோதமான செயல் கள் மூலம் வெளிப்பட்டு நெறிபிறழ்வினை உண்டாக்கும். மேற்கூறிய பண்புகள் யாவும் நெறி பிறழ்ந்த குழந்தைகள் அனைவ ருக்கும் பொதுவானவை என்று க்ருதுதல் தவறு. இதில் பொதுமைப் படுத்துதல் தீங்கு பயக்கும். இவர்களின் சமூகத் தன்மைக்குப் புறம்பான செயல்களுக்கும் பல காரணங்கள் இருக்கலாம். அவையனைத்தையும் அறிந்த பின்னரே இக்குழவிகளின் நடத்தையைப் பகுத்தறிந்து அவை களைத் திருத்துவதற்குத் திட்டம் வகுக்கலாம். நெறிபிறழ்வினைத் தடுத்தல் நெறிபிறழ்வினைத் தடுப்பதற்குக் கீழ்க்கண்ட விதிகள் பெருந்துணை புரியும் : (i) நெறிபிறழ்ந்த நடத்தைக்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். (ii) இயன்றவரை அக்காரணங்களை அகற்ற வேண்டும்.

  • 1 ŝirëåòsq-disorder.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/366&oldid=778296" இலிருந்து மீள்விக்கப்பட்டது