பக்கம்:கல்வி உளவியல்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 345 (iii) அதன்பிறகு உடன்பாடான கல்விமுறைச் சிகிச்சையினைத் தருதல் வேண்டும். இவ்விடத்தில், நோய்காடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். ?? என்ற திருவள்ளுவர் தரும் சிகிச்சை முறையினை எண்ணி மகிழ்க. மேற்கூறிய காரணங்களிலிருந்து அன்பு, பாதுகாப்பு, மனநிறைவு, தன்மதிப்பு, அறநெறி கிலே போன்றவை மீண்டும் இக்குழவிகளுக்குக் கிடைக்கச் செய்தால் அவர்கள் தீச்செயல்களில் இறங்கமாட்டார்கள் என்பது உறுதி. சிறுவர்களிடம் தோன்றும் பொருளாதார நிலையில் குறைவு, தகுதியின்மை,தாழ்வுணர்வு போன்ற குறைபாடுகளே உணர்ந்து அவற்றிற்குக் கழுவாய் கண்டால்-தக்க பரிகாரம் அளிக்கப்பெற்ருல்அச்சிறுவர்களிடம் கல்ல பொருத்தப்பாடு ஏற்பட்டு சிறந்த ஆளுமை வளர்ச்சியும் காணப்பெறும். அச்சிறுவர்களிடம் தான்” என்ற எண்ணம் தூய நிலையில் வளர்ந்துவர உதவவேண்டும். இதற்கு எல்லையற்ற பொறுமையும், ஆழ்ந்த அன்பும், பரபரப்பு அற்றதோர் அமைதிகிலேயும் வாய்க்கப்பெற்ற தொண்டர்கள் வேண்டும். இச்சிறுவர்களின் வாழ்க்கை வியத்தகு நிலையில் ஒவ்வொரு நாளும் திருந்திவரும் அற்புதத்தில் உறுதி யான கடைப்பிடிப்பும், மக்கள் இயல்பே விளங்கும் கடவுள் கிலேயில் கம்பிக்கையும் கொண்ட தொண்டர்களால்தான் இதனை வெற்றிகரமாக கிறைவேற்ற முடியும், இரண்டாவதாகச் செய்யவேண்டுவது தம்மிடத்திலும் பிறரிடத்தி லும் நம்பிக்கை பெற்று வாழுமாறு இச்சிறுவர்களைப் பழக்கவேண்டும். அவர்களுடைய உண்மையான ஆற்றல்களுக்கும் இயல்பூக்கங்களுக்கும் ஏற்றவாறு கைவேலைகளில் தேர்ச்சி பெறச் செய்யலாம். அதனால் தன்னம்பிக்கை ஏற்பட்டு சமூக எதிர்ப்புக் குறையும்; கூட்டுறவும் ஏற்படும். தம் மால் நற்செயல் புரிய இயலும் என்னும் பண்பும் (தற்சாதிப்பு) அவர்களிடம் வளரும். இதற்கு அவர்கள் முழு நம்பிக்கை வைக்கும் ஒரு முதிர்க் தோரின் துணை மிகவும் இன்றியமையாதது. அவரிடம் வலுவான அன்பு ஏற்பட்டால்தான் இவர்களுடைய மனப்பான்மையிலும் மாற்றம் நிகழும். அவரைப்போல் தாங்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். அன்பு, பாதுகாப்பு, உடைமை எண்ணம், 2 குறள்-948:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/367&oldid=778298" இலிருந்து மீள்விக்கப்பட்டது