பக்கம்:கல்வி உளவியல்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த கடத்தை 347t நெறி பிறழ்ந்த சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பிரச்சினை. எனவே, எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துவதான திருத்த முறைகளை விரிவாகக் கூறுவதென்பது இயலாததொன்று. கனவிலி மனம் அதன் தன்மையும் முக்கியத்துவமும் ஐந்தாவது அத்தியாயத்தில் உள்ளக்கிளர்ச்சிகளை நசுக்குவதால் நேரிடும் அபாயங்களை ஓரளவு கண்டோம். இயல்பு பிறழ்ந்த நடத்தை களைப்பற்றியும் கெறிபிறழ்ந்த நடத்தைகளைப்பற்றியும் மேலே கண் டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இவை யாவும் கேரிடக்கூடும். நேரிடாமல் இயன்றவரைத் தடுப்பதே பெற்றேர், ஆசிரியர்களின் கடமை யாகும். அத்தகைய நடத்தைகள் மாளுக்கர்களிடம் தோன்றும் பொழுது அவற்றைச் சமாளிக்கும் முறைகளையும் அவர்கள் அறிக் திருத்தல் வேண்டும். இதற்கு உள்ளத்தின் பகுதிகளைப்பற்றி ஓரளவு தெரிந்திருத்தல் இன்றியமையாதது. உளத்தின் மூன்று பகுதிகள் : ஒரு சில மக்களின் பெயர்களை நாம் நினைவு கூரும்பொழுது உடனே நினைவுக்கு வருவதில்லை. அப்பொழுது காம் 'நெஞ்சில் இருக்கின்றது, கினை விற்கு வரவில்லை” என்கின்ருேம். வேறு வேலையாக இருக்கும்பொழுது அந்தப்பெயர் திடீரென்று நினைவிற்கு வருகின்றது. இத்தகையவை நாம் அடியோடு மறந்து போனவை அல்ல. எனவே, நினைவுகள் கனவில் இருப்பன, கனவில் அடங்கிக்கிடப்பன, நன வற்றன என மூன்று வகையாகும். இவற்றிற்கேற்ப நம் உளமும் மூன்று பகுதிகளாக இருக்கின்றன. அவை கனவிளம்- கனவடி உளம், கனவிலி: உளம்” என்பன. அவை முறையே மேற்படை உளம், நடுப்படைஉளம், அடிப்படை உளம் என்றும் வழங்கவும் பெறும். உளம் என்பதுபற்றி இக்காலத்தார் கருதுவது: “உள்ளம் என்று முன்னையோர் கருதியது இப்போதைய கனவுளத்தையே குறிக்கும்; உள்ளத்தின் பெரும்பகுதி. நனவுள்ளத்திற்குக் கீழே ஆழ்ந்திருந்து மனிதனது நடத்தையை உரு வாக்குகின்றது. இந்த ஆழ்ந்த உள்ளம் (நனவிலி உளம்) மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. நாம் வெளிப்படையாகக் காணும் அறிகுறிகளும் நடத்தையும் ஆழ்ந்த உள்ளத்தில் ஏற்படும் மாறுதல்களாலானவை. எனவே, மனித னது பெரும்பாலான நடத்தைக்குக் காரணம், ஆழ்ந்த உள்ளமே” என்ப தாகும். இந்த உண்மையைத் தொகுத்து அறிவியல் அடிப்படையில் 2 s shoreuerto - conscious mind. 26 issorsulo. 2 orth-sub-conscious, mind. 27 Sorsols' 2-strib-unconscious mind.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/369&oldid=778302" இலிருந்து மீள்விக்கப்பட்டது