பக்கம்:கல்வி உளவியல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கல்வி உளவியல் தோன்றும்போது உடல்மாறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒருவர் சினங்கொள்ளும்பொழுது அவர் கண்கள் சிவக்கின்றன; பற்கள் நற கற வென்கின்றன ; கை மூட்டுக்கள் நெம்புகின்றன ; சுவாசித்தலும் குருதி யோட்டமும் பாதிக்கப்பெறுகின்றன. இம் மாறுபாடுகளால் அவர் சினங் கொண்டார் என்று எளிதில் ஊகிக்கலாம். அங்ங்னமே, ஒருவர் அவ குடைய பொட்டுநரம்புகள் அசைவதைக் கண்டு அவர் ஆழ்ந்து சிந்திக் கின்ருர் என்று அனுமானிக்கலாம். இப் புறக்காட்சி முறையால் பல உண்மைகள் கண்டறியப் பெற்றிருக்கின்றன. இம் முறையிலும் இடர்ப் பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நம்முடைய விருப்பு வெறுப்புக்கள் இதிலும் கலக்கின்றன. சிலர் சினங் கொண்டிருந்தாலும் புன்னகை காட்டுவர் ; பிறர் துன்புறுவதில் உவகை கொள்ளினும், விசன மடைந்த வர் போல் நடிப்பர். ஆகவே, புறக் காட்சி முறையும் குறையுடையதே. சாதாரண உற்று நோக்கல் வேறு, அறிவியல் உற்று கோக்கல் வேறு. ஒரு தாய் தன் குழந்தை விளையாடுவதையும், அழுவதையும், பிற குழந்தைகளுடன் கலாம் விளைப்பதையும், உறவாடுவதையும் காண் கின்ருள். இது கட்டுப்பாட்டிற்குட்படாத உற்றுநோக்கல். ஆனல், வகுப்பில் மாளுக்கர்கள் மனப்பாடம் செய்யும் முறைகள்பற்றிச் சில கட்டுப்பாடுகளே ஏற்படுத்தி, அவர்களின் தேர்ச்சி வேற்றுமைகளைக் கவனித்தல் கட்டுப்பாட்டிற்குட்பட்ட உற்று நோக்கல். பள்ளி மாணக்கர்களைக் குறிப்பிட்ட காலங்களில் கவனித்து, அவர்கள் செயல்களை ஒழுங்காக எழுதிவைத்து அவர்களுடைய புனைவுத்திறன், உள்ளுணர்வு", தலைமைப் பண்பு, பொறுப்பு இவை போன்ற குணங் களை அறுதியிடலாம். பல குடிமைப்பண்புகளையும் இம் முறையில் கவனித்து அறியலாம். பதிவேடுகள் : சில பதிவேடுகளி"லிருந்தும் உளவியல் ஆராய்ச்சி முறைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவற்றுள் மூன்றினை மட்டிலும் ஈண்டு விளக்குவோம். (i) நிகழ்ச்சி முறை* : ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நிரூபிப்ப தற்காகச் சில திட்டமான வரையறுத்த நிகழ்ச்சிகள்ை எடுத்துக்காட்டு வதைப் பொறுத்து இம்முறை அமைகின்றது. விலங்குகளிடத்தும் சிறு வர்களிடத்தும் இம்முறை மேற்கொள்ளப்பெறுகின்றது. குறிப்புக்களே. யும் கதைகளையும் கொண்டு விஷயங்களையும் விளக்கமுயலுகின்றது. இம் 47 a siressorfi &–intuition. 48 u%léâuG85:ir—records. 40 #soft opop-anecdotal method.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/37&oldid=778303" இலிருந்து மீள்விக்கப்பட்டது