பக்கம்:கல்வி உளவியல்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 கல்வி உளவியல் முதன்முதலாக வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட்" என்ற உளவிய லறிஞர். மேற்கூறிய உளங்களை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ்' என்ற உளவியலறிஞர் ஓர் அரிய உவமையைக் கையாளுகின்றர். வடபெருங் கடலிலிருந்து பெரும் பனிக்கட்டி மலைகள் அட்லாண்டிக் மாபெருங்கட லில் புகும். இக்குன்றுகளின் கொடுமுடிகளே (குன்றுகளின் ; பாகமே) வெளியே தெரியும், பனிக்கட்டிமலை யொன்றினை முழு உள்ளத்துடன் ஒப்புமைப்படுத்திக் கூறும்பொழுது சிறிதளவு தோன்றும் கொடுமுடி யை கனவுளத்தோடு ஒப்புமை கூறலாம். அவ்வாறு கிலேயாகத் தோன்றிக் கிடக்கும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறு பகுதி சுற்றியுள்ள அலைவீச்சில்ை தோன்றியும் வரும். இதனை கனவடியுளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலைபோலக் கிடக்கும் பகுதி தாக்கி ளுல் பெருங்கப்பல்களும் அச்சுவேறு, ஆணிவேருகச் சிதைந்துஉடையக் காண்கின்ருேம். இதனை கனவிலியுளத்திற்கு ஒப்பிடலாம். நனவுளம் முழு உளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிடலாம். புறக்காற்ருலும் பிறவற்ருலும் இந்தப் பணிக்கட்டிமலை தலைகீழாகப் புரளுவதும் உண்டு. அதுபோலச் சில சமயம் கனவிலியுளம் கனவுளமாக மாறுவதும் உண்டு: இத்தகைய உளமாற்றம் சிறுகச்சிறுகவும் எழலாம்; திடீர்என்றும்எழலாம். எப்படிப் பணிக்கட்டி மலையின் பெரும்பகுதி வெளியே தெரியாமல் உள்ளே ஆழ்ந்திருக்கின்றதோ, அதேபோன்று கனவிலியுளமும் உள்ளே ஆழ்ந் திருக்கின்றது. எப்படி மேலே தெரியும் பனிக்கட்டி மலைக்குத் தண்ணீரில் ஆழ்ந்திருக்கும் பாகம் அடிப்படையாக இருக்கின்றதோ, அப்படியே கனவிலியுளமும் கனவுளத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது. வெளியே தெரியும் பனிக்கட்டிக் குன்றின் பகுதியும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் அதன் அடிப்பாகமும் ஒரே மலையின் இரு பகுதிகளே; அதேபோன்று கனவுளமும் கனவிலியுளமும் ஒரே உள்ளத்தின் இரு பகுதிகளாகும். நம் முடைய உள்ளத்தில் பதியப்பெற்றுள்ள நினைவுகள் தகுந்த தூண்டல் களால் நம் நினவுக்கு வருகின்றன; சாதாரணமாக கனவுக்கு வராதவை சிறப்பான தூண்டல்களால் கனவுக்குவருகின்றன. ஆனால், பல நினைவுகள் பலமான தூண்டல்களால் அல்லது மனத்தின் பெருமுயற்சியால்தான் வெளி வருகின்றன. இவை ஆழ்ந்த மனத்திலிருந்து-நனவிலியுளத்தி லிருந்து-வெளிவருபவை.

    • #šu cirú- storirii@-Sigmund Freud. * o estedsstub Ggiosio-William James. 8 o' all-Glu55 &Lso-The Arctic Ocean. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/370&oldid=778305" இலிருந்து மீள்விக்கப்பட்டது