பக்கம்:கல்வி உளவியல்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 349 கனவிலி உளம் குழந்தை பிறந்தவுடன் சிறிதளவு இருந்தபோதிலும் குழந்தை வளர வளர, அதன் கடத்தைத் தடைகளும் விதிகளும் அதிகம் ஏற்பட ஏற்பட, கனவிலியுளத்தில் அடைபட்டிருக்கும் இச்சைகளும் அவற்றைச்சார்ந்த அனுபவங்களும் அதிகப்படுகின்றன. எனவே, கனவிலியுளத்தில் இருப்பவைகள் பெரும்பாலும் ஒருவன் தன் வாழ்க்கையில் நேராக வெளிப்படுத்த முடியாத அனுபவங்க ளாகும். இதைத்தான் கனவிலி உளம் கனவுளத்தினின்றும் வளர்க் தது” என்று பொதுப்படையாகக் கூறுவர். கனவுலியுளத்தில் ஒருவனது சொந்த அனுபவங்களோடு அவனுடைய மூதாதையர் அனுபவங்களும் அடைபட்டிருக்கின்றன என்றும் பிராய்டு கூறியுள்ளார். ஆனல், இந்தக் கருத்தை ஆராய்ந்து அடிப்படையான உண்மையை வெளியிட்டவர் பிராய்டின் மாளுக்கரான சி. ஜே. யுங் என்பார்.” “மனிதன் இறந்து போன தன் மூதாதையரையும் தன் ஆற்றல்களையும் இணைக்கும் ஒரு சங் கிலி போன்றவன். ஒருவனது உடலமைப்பு அவனுடைய மூதாதையரது உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அங்ங்ணமே ஒரு வனது உள்ளமும் அவனுடைய மூதாதையரின் உள்ளத்தை அடிப்படை யாகக் கொண்டது.” என்பது யுங் தரும் விளக்கம். இந்த கனவிலி யுளத்தின் வளர்ச்சியும் மாற்றமும் மனத்தினுள் நடைபெறும் செயல்’** என வழங்கப்பெறும். அது நடைபெறுவது நமக்குத் தெரியாது; கனவிலி நிலையில் அது நடைபெறுகின்றது. குழந்தைகளிடம் காணப்பெறும் பெரும்பாலான இயல்பு பிறழ்ந்த நடத்தைகட்கும் நெறி பிறழ்வான நடத்தைகட்கும் அவர்கள் மனத்தில் நடைபெறும் போராட்டங்களும் நசுக்கப்பெற்று அடைபட்டிருக்கும் இச் சைகளுமே காரணமாகும். கனவிலி ம்னத்தைப்பற்றி நன்கு அறிந்தவர் கள் இவற்றிற்கு நல்ல விளக்கம் தரலாம். எனவே, குழந்தைகளின் கல்வியில் பொறுப்புக் கொண்டுள்ள ஆசிரியருக்கும் கனவிலி மனத்தை பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது. இனி, குழவிகளின் கடத்தை யிலும் மாளுக்கர்களின் நடத்தையிலும் காணப்பெறும் இயல்பானவை யும் இயல்பு பிறழ்ந்தவையுமான சில செயல்களே ஆராய்வோம். நெறி பிறழ்வினை மேலே கண்டோம். ஏனையவற்றை ஈண்டு காண்போம். பெருவிரல் சுவைத்தல் குழவிகளின் முதலாண்டில் இச்செயலை நாம் எதிர்பார்க்கலாம். சில குழவிகளிடம் பிறந்த சில நாட்களிலேயே இப்பழக்கம் ஏற்படுகின்றது: so. A. Gg. u.ä.-C. J. JUNg. 82 மனத்தினுள் நடைபெறும் செயல்.endopsychic process.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/371&oldid=778307" இலிருந்து மீள்விக்கப்பட்டது