பக்கம்:கல்வி உளவியல்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 கல்வி உளவியல் சிலரிடம் சற்று தாமதத்துடன் தொடங்குகின்றது; பிறரிடம் இப்பழக்கம் தோன்றுவதே இல்லை. தாயின் மாற்பிற்குப் பதிலாகக் குழந்தை தன் விரலைச் சப்பி மகிழ்கின்றது; வாயசைவுகளில் குழந்தை அளவற்ற மகிழ்ச்சி கொள்ளுகின்றது. முதல் இரண்டாண்டுகளில் சில தடவைகளில் பெருவிரல் சப்புவதைப்பற்றி நாம் அதிகமாக கவலைகொள்ள வேண்டிய தில்லை. இதில் அதிகப் பரபரப்பு காட்டாதிருந்தால் இப்பழக்கம் நாளடை வில் தானகவே மறைந்து போகும். குழவிகள் இதை விடுவதற்கு முன் நாம் இதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், பல சிக்கல்கள் ஏற்படு கின்றன; சில குழவிகளிடம் அதை நீக்கவே முடியாது போகின்றது. பெருவிரல் சுவைத்தலைப்பற்றிப் பல கருத்து மாறுபாடுகள் உள்ளன. இது உடல் அல்லது உள்ளம்பற்றிய கோளாறினல் ஏற்பட லாம். குழவிகளுக்குப் போதுமான தாய்ப்பால், புட்டிப்பால் கிடைக்காத தால்தான் இப்பழக்கம் சில குழவிகளிடம் காணப்பெறுகின்றது என்று சில உளவியலார் கருதுகின்றனர்; வேறு சிலர் இது உணவுக் குறைவின் அறிகுறி என்கின்றனர். மற்றும் சிலர் இது உளத்தில் மறைந்துகிடக்கும் உணர்ச்சிச் சிக்கலின் வெளிப்படைச் செயல் என்றும் கூறுகின்றனர். இவை ஒவ்வொன்றிலும் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. தனிப்பட்ட குழவி ஒவ்வொன்றையும் நாம் ஆராய வேண்டும் என்பதையும் இவை உணர்த்துகின்றன. - விடாது சுவைத்தலால் நேரிடும் கேடுகள்: குழவிகளிடம் இப் பழக்கத்தை நீக்குவதற்கு முன்னர் இப்பழக்கத்தால் நேரிடும் கேடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் ழிகவும் இன்றியமையாதது. இப் பழக்கத்தால் பற்களும் பற்களின் வரிசையமைந்த தாடைப் பாகங்களும் பாதிக்கப்பெறும். மேல் வரிசைப் பற்கள் முன் பக்கம் வளைந்து தள்ளப்பெறுகின்றன; சில சமயம் கீழ் வரிசைப்பற்கள் பின்னுக் குத் தள்ளப்பெறுகின்றன. பெருவிரலின் வட்டவடிவமான பாகத்தை மேல் நோக்கி வைத்துச் சுவைக்கும் பழக்கமுடைய குழவிகளின் பற்க ளுக்குத்தான் அதிகமாகக் கேடுண்டாகும். விரலும் வளர்ச்சியில் குன்றி விடும். - குழவிப் பருவத்தில் மறைந்து, பிற்காலத்தில் மீண்டும் பெருவிரல் சுவைக்கத் தொடங்கும் குழவிகளின் பற்கள் முதலில்இருந்ததுபோலவே முன்பக்கம் தள்ளப்பெறும். தூங்கும் பொழுதுகூட பெருவிரல் சுவைக்

    • GluGestrsò & sosušğ sò-thumb-Sucking. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/372&oldid=778309" இலிருந்து மீள்விக்கப்பட்டது