பக்கம்:கல்வி உளவியல்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 கல்வி உளவியல் கொடுத்து கை, வாய்க்குப் போகா வண்ணம் தடுக்கலாம். இவ்வித இயற்கை முறைகளில் இப்பழக்கத்தை நீக்க முடியாவிடில், குழந்தை வயது வந்தால் தாகை அப்பழக்கத்தை விட்டுவிடும் என எண்ணி வாளா இருத்தல் மேல். திட்டுவதோ, கடிவதோ, அச்சுறுத்துவதோ, வேறு வகையில் தொந்தரவு செய்வதோ கூடாது. இவற்ருல் இன்னும் அதிக மாகத் தூண்டப்பெற்று, இப்பழக்கம் நன்கு வலியுறும். தலைவலி, போய் திருகுவலி வந்ததாக முடியும். நகம் கடித்தல் சிறுவர்களிடம் காணப்பெறும் நரம்பு நடுக்கத்திற்கு நகம் கடித்தல்84 ஓர் அறிகுறியாகும். இவ்வாறு நடுக்கமுள்ள சிறுவர்கள் சாதாரணமாக அமைதியற்றிருப்பர்; பதற்றமுடையவராகவும் இருப்பர். இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கமாட்டார்கள். முன்கோபம், அச்சம் ஆகியவை. இவர்களிடம் காணப்பெறும். மிகச் சிறந்ததா என்றுகூட கவனிக்கா மல் இலகுவான செயல்களையே செய்யும் தன்மையுடையவர்கள். இவர்கள். இத்தகைய சிறுவர்களைப் பாதுகாப்புடன் கவனித்து அவர்களுடைய சிக்கல்களைத் தீர்க்க வழிகாண வேண்டும். ஒவ்வொருவருடைய குறைகளையும் கூர்ந்து கவனித்து அறிந்து அவற்றிற்குத் தக்கவாறு அவர்கள் சமூகத்தில் நடந்து கொள்ளும் நேறியினில் உய்க்க வேண்டும். இவர்களிடம் தன்னம்பிக்கையை வளரச் செய்தல் சாலப் பயன் தரும். வெற்றியைப்போல் வெற்றி தருவது வேருென்றும் இல்லை. யன் ருே ? பொய் சொல்லுதல் ’’ பொய்களில் பல வகைகள் உள. சில வேண்டுமென்றே உளம் அறிய உண்மையைத் திரித்துக் கூறப்பெறுபவை. ஏனையவை சூழ்நிலையின் காரணமாக ஏற்படுபவை, பொய் சொல்லுதல் என்பது ஒரு தற்காப்பு அல்லது தப்பும் வழி; அச்சத்தின் காரணமாகவோ பழிக்கஞ்சியோ அது மேற்கொள்ளப்பெறுகின்றது. பெரும்பான்மையான பொய்கள் மனச்சிக்கல் அல்லது போராட்டத்தின் காரணமாக எழுபவை. ஆகவே, பொய் சொல்லுவது ஒருவித உளநோய்; நடத்தைப் பிசகு, அன்று. இப் பழக்கத்தினின்றும் குழவிகளை விடுவிக்க வேண்டு 84. நகம் கடித்தல்-mail-biting, 85 பொய் சொல்லுதல் .lying. 86 தற். asrāu géoso outb suff-defence or escape mechanism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/374&oldid=778313" இலிருந்து மீள்விக்கப்பட்டது