பக்கம்:கல்வி உளவியல்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 கல்வி உளவியல் அவர்களின் செயல்களே சிறுவர்களை அதிகமாகப் பாதிக்கின்றன. அத் துடன் சமூகம் ஏற்காது என்று கருதும்செயல்கள் நேரிடும்போதெல்லாம் வழக்கமாகப் பொய்யையே புகலுகின்றனர். பெரும்பாலும், சிறுவர் களின் பொய்க்கு அச்சமே அடிப்படைக் காரணமாகும். பொய் சொல்லு வதைப்பற்றிப் பர்ட்" என்ற அறிஞர் கூறுவதாவது: “பொய் சொல் லுதல் எண்ணற்ற வடிவங்கள் கொள்ளுகின்றது; அதற்கு ஆயிரக் கணக் கான பல்வேறுபட்ட ஊக்கிகள் காரணமாகலாம். அஃது அறிவு சார்ந்த குறைபாட்டிற்குப் பதிலீடு செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பெறலாம். அச்சம் போன்ற ஏதாவதொரு உள்ளக் கிளர்ச்சியாலும் அது தூண்டப் பெறலாம்; ஆனல் பேராசை, சினம், தற்புகழ்ச்சி, பணிவு, தவருண பற் றுறுதி (loyalty), தவருன அன்பு ஆகியவையும் அதற்குக் காரணமாக 50frto’’89 - தடுக்கும் வழிகள் : பொய் சொல்லுவதைத் தடுக்கும் வழிகள் யாவை? முதலாவது, ஒரு குழந்தை முதன் முதலில் பொய் சொல்ல முயற்சி செய்யும்பொழுதே அதனைக் கண்டறிந்து, அதனல் எந்தவித நன்மையையும் அடைய முடியாதென்றும், அதைக்காட்டிலும் வேறு முறைகளால் சிக்கல்களைச் சமாளிக்க முடியும் என்றும் அக்குழந்தை உணரும் முறையில் கூறவேண்டும். முதலில் இப்பழக்கத்தை வேரிலேயே களையவேண்டும். பொய் கேடான நிலையை உண்டாக்கிவிடும் என்பதைக் குழந்தை அறியும்படிச் செய்தல் வேண்டும். இரண்டாவது குழந்தைகளிடம் அஞ்சாதிருக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும். "அச்சமே கீழ்களது ஆசாரம். அறநெறித்துணிவு சமூகத்தால் அங்கீகரிக்கப்பெறவேண்டும். சில பெரியோர்களின் வரலாற்றிலிருந்து உண்மை விளம்பப் பயப்படாமையையும் அவர்கள் ஆற்றிய செயல்களையும் கொண்ட நிகழ்ச்சிகளைக் கூறுதல் இதற்கு பெருந்துணையாக இருக்கும். மூன்ருவது, குறிப்பிட்ட காரணத்திற்குக் குறிப்பிட்ட சிகிச்சையே பயன் விளைவிக்கும். ஒரு மாளுக்கன் பிறர்மெச்சிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய அல்லது தன் தந்தையினுட்ையவீரச் செயல்களைப்பற்றிப் பொய் புகன் ருல், அவன் விரும்பும் புகழை உண்மை யாகப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தல் வேண்டும்; அதற்குத் தகுந்த வாய்ப்புத் தந்தால், அவன் அதில் சிறப்புறுவான். தண்டனைக்கு அஞ்சிப் பொய் கூறும் குழந்தைக்கு, அது செய்த குற்றத்திற்கு ஏற்ற நீ தியான

    • uit--Burt. so Burt : The young delinquent.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/376&oldid=778316" இலிருந்து மீள்விக்கப்பட்டது