பக்கம்:கல்வி உளவியல்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 355 தண்டனை வழங்கி அதன் மூலம் உண்மை கூறும்படிச் செய்யலாம். குழந் தைகளின் முழு கிலைமையையும் சரியாகப் புரிந்துகொண்டால்தான் அவர்கள் கூறும் பொய்களே அறிந்துகொள்ளலாம்; தக்கவாறு அவர்களை சீர்திருத்தமும் செய்யலாம். தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்' சிறு குழந்தையின் சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்திப் படுக்கையைச் சிறுநீரால் நனைக்காமலிருக்கச் செய்வது பெற்ருேசின் கடமை, குழந்தை பிறந்த முதல் வாரம் தொடங்கி எந்தெந்த நேரங்களில் சிறுநீர் கழிக்கின் றது என்பதை அறிந்துகொள்ளலாம். இரவில் குறிப்பிட்ட நேரங்களில் குழந்தையை எடுத்து சிறுநீர் கழியவிட்டால்,இரவில் குழந்தை சிறுநீரால் படுக்கையை கனக்காது. காலையில் விழித்தெழுந்தவுடன் மலம், சிறு நீர் கழித்து, முகம், கைகால் கழுவி, சுத்தம் செய்து ஈரமில்லாமல் காய்ந்தி ருக்கச் செய்யவேண்டும். இதல்ை காய்ந்த சுகமான உணர்ச்சியில் விருப்பமும், ஈரமான அசெளகர்யமான உணர்ச்சியில் வெறுப்பும் ஏற் படக் குழந்தை பழகி விடுகின்றது. மூவாட்டைப் பருவத்தில் குழந்தை தானே எழுந்து சிறுநீர்கழிதலைச் சமாளித்துக் கொள்ளவேண்டும். அதற்குமுன்னரே இதனைச் சமாளிக்க முயற்சி செய்தால் நரம்புக் கிளர்ச்சி, உள்ள கிளர்ச்சித் தொல்லைகள் கேரிடக் கூடும். முதல் அல்லது இரண்டாம் வயதில் 'சிறுநீர் கழிய வேண்டுமா?’ என்ற விளுவிற்கு "ஆம், இல்லை' என்ற விடைவரவேண் டும். அதற்குப் பிறகு குழந்தை தானே சிறுநீர் கழியவேண்டும்” என்று சொல்லவேண்டும். கடிதல் கேடேவிளைவிக்கும்; வேண்டுமென்றே குழந்தை படுக்கையில் சிறுநீர் பெய்வதில்லை. ஆகவே, பெற்றேர் அதனைப் பொறுமையோடு கவனிக்கவேண்டும். முதலில் பகல் நேரத்தில் அடக்கி யாளக் கற்றுக்கொடுத்தால், இரவிலும் அதை அடக்கியாளக் கற்றுக் கொள்ளும். சிறுநீர்ப் பையை அடக்கியாளமுடியாமைக்கு இருகாரணங்கள்உள. ஒன்று,உடலைப்பற்றியது; மற்ருென்று, உள்ளத்தைப்பற்றியது. குழந்தை இரவில் சிறுநீர் கழிக்கும் நேரத்தைக் குறித்துக்கொண்டு அதற்குக் கால் மணி நேரத்திற்குமுன்பே குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்கச்செய்தால் படுக்கையைச் சிறு நீரால் நனைக்கும் வழக்கத்தைச் சுமார் ஒரு திங்களி லிருந்து ஆறு திங்கட்குள் கட்டுப்படுத்திவிடலாம். இவ்வாறு முதற் க் தூக்கத்தில் đìgyfữsgậ##8ô-beữ-wetting.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/377&oldid=778317" இலிருந்து மீள்விக்கப்பட்டது