பக்கம்:கல்வி உளவியல்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கல்வி உளவியல் காரணத்தைச் சமாளிக்கலாம். சிறுநீர்கழிந்த, கழியாத இரவுகளின் குறிப்பு ஒன்று வைத்துக் குழந்தைக்குக் காண்பித்தால், குழந்தையே தன் பொறுப்பை உணர்நது வெற்றிபெறத் துணைச் செய்யலாம். குழந்தை பெறும் வெற்றியே அதற்குக் கிடைக்கும் பரிசாகும். குழந்தை, சிறுநீர் கழித்தல்குறித்து எவ்வாற்ருனும் குற்ற உணர்ச்சியும் இயலாமை உணர்ச்சியும் அடையாதபடி பாதுகாப்பது பெற்றேரின் கடமையாகும். களவாடுதல் களவாடுதலும்* மறைந்திருக்கும் ஒரு சிக்கலின் அறிகுறி. குழந்தை வேறு பலவகைகளில் உண்மையற்ற விதமாக நடந்துகொண்டாலும் இந்தச் சிக்கல் கிரந்தரமானதாகக் கொள்ளலாம். களவாடுதல் குழந்தை நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பொருளைப்பற்றி இருக்குமாயின், கள வாடுதல் மிதமிஞ்சிய உடைமையூக்கத்தின் * செயற்படுதலாகும். கள வாடுதலுக்குரிய மேம்போக்காகத் தென்படும் காரணங்களும், ஆழ்ந்த உண்மையான காரணங்களும் பள்ளிக்கு வெளியே நடைபெறுபவை. ஆகவே, இப்பழக்கத்தைப் போக்குவதற்குப் பெற்ருேர்-ஆசிரியர் ஒத் துழைப்பு மிகவும் இன்றியமையாதது. பழக்கத்தைப் போக்குவதற்கு முயற்சி எடுப்பதற்கு முன்னர் அஃது எழுவதற்குரிய ஊக்கிகளையும், பிற காரணங்களையும் நன்கு அறிதல் வேண்டும். காரணங்கள் : திருடுவதற்குரிய காரணங்கள் பல்வேறுபட்டவை; பல்வேறுதுண்டல்களால் எழுபவை, (i)உடைமை என்பதன் கருத்தினைச் சரியாக அறியாமை; பெரும்பாலோர் ‘என்னுடையது' 'உன்னுடையது.” என்பவற்றின் வேற்றுமையை அறிவதில்லை. பள்ளிக்கு வருவதற்கு முன் இது கற்கப்பெற்றிருத்தல் வேண்டும். (ii) பொருள்களின் தேவை ஏற்படுதல் ; அவற்றை எப்படி அடைதல் என்பதைப் புரிந்து கொள் ளாமை. பசி ஒரு வன்மையான ஊக்கி; அதனுல் சில சமயம் சிலர் உணவுப் பொருளைத் திருடலாம். சமூகத்தில் ஒரு நிலையினை வகிப்பதற்காகப் பணம் தேவைப்படும்; அக்குழந்தை பணத்தைத் திருடலாம். (iii) சில சமயங்களில் மற்றப் பகுதிகளில் உள்ள நெருக்கடியை நிவர்த்திப்பதற் காகக் களவாடுதலை மேற்கொள்ளலாம். பிறருக்கு ஏதேனும் கொடுத்து அவருடைய நட்பு அல்லது பாராட்டுதலைப் பெறவோ, அல்லது மேல் வேடத்திற்காகவோ திருடலாம். பிற தொடர்புகளில் பாதுகாப்பில்லாத குழந்தை களவாடுதலில் மனநிறைவு கொள்ளலாம். (iv) பெரும்பாலும் திருடுவது பல்லாண்டுகளாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவே நடை 4+ sersus Gäß-stealing. 42 2-sol solds,ésà-acquisitiveness.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/378&oldid=778318" இலிருந்து மீள்விக்கப்பட்டது