பக்கம்:கல்வி உளவியல்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 357 பெறலாம். முதலில் களவு ஒரு பரிசோதனையாக மேற்கொள்ளப்பெற்று, அது கண்டுபிடிக்கப் பெருததால், மீண்டும் மீண்டும் செய்யப்பெற்று வரு கின்றது; அதில் எவ்வித மனநிறைவும் ஏற்படாததால் அது தொடர்ந்து "ற்கொள்ளப்பெறுகின்றது. (w, வேறு குழந்தையைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கமும், பெற்ருேர் மீது காட்டவேண்டிய எதிர்ப்பு மனப்பான்மையும், ஆசிரியர் மீது கொண்டுள்ள வெறுப்பும், சுேக்கப்பெற்ற பாலுணர்ச்சியும் சமூகத்திற்கு விரோதமான இச்செயலில் குழந்தைகளை இறங்கச் செய்கின்றன என்று சில உளவியலார் கருதுகின்றனர். பிற இயலிக்க்கங்கள் செயற்படத் தடைப்பட்டாலும் அத்தடையின் விளைவு உடைமையூக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது என்கின் ருர் பர்ட் என்ற அறிஞர். இயல்பூக்கங்கள் உள்ளத்தின் தனித்தனியான பொறி நுட்பங்கள் அல்ல வென்பதையும், அவை ஒரே மூலத்திலிருந்து பிரிந்த கிளைகளே என்பதையும் நினைவுகூர்ந்தால், ஒரு கிளையிலிருந்து ஆற்றல் பிறிதொரு கிளேக்கு மாற்றப்பெறுகின்றது என்பதை நாம் நம்பலாம்; இந்தச் சந்தர்ப் பங்களில் உடைமையூக்கம் நன்கு செயற்படுகின்றது-இது பர்ட் தரும் விளக்கம். களவினத் தடுக்கும் முறைகள் : எது எப்படியாயினும் இளதாக முள் மரம்கொய்க என்ற கருத்துப்படி இத்தீய பழக்கத்தினை வேரிலேயே களேந்துவிட வேண்டும்; தொடக்கத்திலேயே இதனைப் போக்கிவிட வேண்டும். (i) உடைமைபற்றிய கருத்தினைக் குழந்தை விளங்கிக் கொள்ளாதிருந்தால், அக்குழந்தைக்கு அதனைக் கற்பிக்கவேண்டும்; அதனை மற்றவர்கள் கிலையில் வைத்துத் தன்னுடைய பணத்திலிருந்து வாங்கின பொருளைப் பிறர் எடுத்துக்கொண்டால் தனக்கு எப்படி இருக் கும் என்பதை உணரச் செய்யவேண்டும். இதல்ை திருடும் மனப் பான்மை மாறி பொருளை இழந்தவர்கள்பால் அனுதாபம் பிறக்கும். அதன் பிறகு 'பொதுச் சொத்து’** என்பதன் கருத்தினையும் உணரச் செய்ய வேண்டும். சிலர் இதனை என்றுமே அறிவதில்லை. பூங்கா, பள்ளிக்குரிய பொருள்கள் தெருக்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதிலிருந்தே இது புலகுைம். ஆனால், இதையே முற்றிலும் கம்பியிருத்தல்கூடாது. கண்டுபிடிக்கப்பெருமல் களவு நடைபெறும் வாய்ப்புக்களைக் குறைத்தல் வேண்டும். (எ-டு) வீட்டில் பணப்பை குழந்தைக்குக் கிட்டாது செய்தல், அறை களைப் பூட்டி வைத்தல், சாக்குகளைச் சரிபார்த்து வைத்தல் முதலியன: 48 Gurg& Glor:#5-common property,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/379&oldid=778320" இலிருந்து மீள்விக்கப்பட்டது