பக்கம்:கல்வி உளவியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 17 முறை. இது முற்றிலும் நம்பத்தக்கதன்று. பெற்ருேர்கள் தம் செல்வக் குழந்தைகளைப்பற்றியும் செல்வப் பிராணிகளைப்பற்றியும் உள்ளது உள்ள. படி கூருமல் மிகைபடக் கூறுவது இயல்பு. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அன்ருே ? கதைகளும் குறிப்புக்களும் உண்மையைப் பெரி தென நினைக்காமல் சுவையையும் கற்பனைச்சிறப்பையும் பெரிதெனக் கருதுபவை. நாயைப்பற்றிய உளவியற் கதை யொன்றில் ஒருவர் தம் செல்வநாயின் முன் செங்கிறப் பொம்மையையும் நீலநிறப் பொம்மை யையும் காட்டும்போதெல்லாம், அது செங்கிறப் பொம்மையையே விரும் பியதைக் கொண்டு அதற்கு நிறம்பற்றிய அறிவு உண்டு என்ருர். ஆளுல், அண்மையில் மேற்கொள்ளப்பெற்ற ஆய்வுகள் மூலம் நாய்கள் நிறக் குருடுடையவை என்ற முடிவு கிடைத்துள்ளது. நாய் செந்நிறப் பொம் மையைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அதன்மணம், கனம், திண்மை போன்ற வேற்றுமைகளாக இருந்திருக்கலாம். அல்லது தற்செயலாக வும் அவ்வாறு நேரிடலாம். ஆகவே, இம்முறை சிறந்ததாகாது. திட்ட மாகக் கண்டவற்றையும், கிபந்தனைகளுக்குட்பட்டு அளக்கக்கூடிய விவ ரங்களையும் மட்டுமே ஏற்கவேண்டும். (ii) தனியாள் ஆராய்ச்சி முறை' : இது பொதுவாக ஒரு தனி யாளைப்பற்றி முற்றிலும் விவரமாக அறிவதாகும். தனித்தனிக் குழந்தை களின் செயல்களை நீண்டகாலம் குறித்து வைத்து, அக் குறிப்புக்களி லிருந்து பொதுவிதிகளே யறிய முயலுவது இம்முறை. மேடுைகளில் குழந்தைகளின் உள்ளத்தியல்பினையும் உடல்நிலையினையும் ஆராய்ந்த அறிஞர்கள் குழந்தைகளைப்பற்றிப் பல குறிப்புக்களை எழுதிவைத்துள்ள னர். சிறுவர்கள், மேதைகள், அறிவிலிகள் போன்றவர்களின் வரலாற் றைப்பற்றியும் இங்ங்ணம் குறிப்புரைகள் எழுதப்பெற்றுள்ளன. இவற்றின் தொகுதியே தனியாள்வரலாருகும். இதுவும் பயன்தரத்தக்க முறையே. சில சமயம், நவீன அறிவியல்முறைப்படி ஒரு மாணுக்கனைப்பற்றி ஆழ்ந்து தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாத தாகின்றது. மாளுக்கனுடைய பிரச்சினைகள் மிக நுணுக்கமும், சிக்கலும் உடையவை எனத் தோன்றில்ை ஆசிரியர்கள் அவற்றை ஒரு நிபுணரிடம் கூறலாம். படித்தல், எழுத்துக்கூட்டல், கணிதம் முதலிய பாடங்களில் நீடித்த பெருந்திறனின்மை, கவர்ச்சியின்மை, மனவெழுச்சிக் கோளாறு, விபரீதச் சமூக மனப்பான்மை முதலிய அறிகுறிகளால் இத்தகைய பிரச்சினைகள் உளவென்பதை அறியலாம். விந்தையான நினைவுத் திறன், அளவு மிக்க புனைவுத் திறன், மிதமிஞ்சிய தனிக் கவர்ச்சிகள், சிறப்புத் திறன் 50 தனியாள் ஆராய்ச்சி முறை-case Study. 2-. سنة. تتة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/38&oldid=778322" இலிருந்து மீள்விக்கப்பட்டது