பக்கம்:கல்வி உளவியல்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 359 பயனுள்ள யோசனை : () பள்ளிச் செயல் கவர்ச்சியுடையனவாக அமைதல் வேண்டும். கதை, விளையாட்டு, கவர்ச்சிகரமான கைத் தொழில்கள், சிறந்த கற்பிக்கும் முறைகள் முதலியவை சிறுவர்களைப் பள்ளிக்கு வரத்துண்டும் சாதகமான ஏற்பாடுகள். (ii) எந்தச் செயல் களும் நோக்கமுடையனவாகவும் அவற்றின் பயன் சிறுவர்கள் உணரவும் எய்தவும் கூடியனவாகவும் இருத்தல். (iii) பள்ளி வராமைக்குத் தடை களாக இருக்கும் ஏதுக்களைக் கண்டறிந்து அவற்றைக் களையத் துணை செய்தல், பொருமை சினத்தின் வளர்ச்சியே பொருமையாக வடிவெடுக்கின்றது. மக்கள்மீது காட்டப்பெறும் வெறுப்புணர்ச்சியே பொருமையாகும். எதிர்பாராதவிதமாக மற்ருெருவருக்குக் கிடைக்கப்பெற்ற அனுகூலம் ஒன்றைத் தான் துய்க்கலாம் என்று எதிர்பார்த்த ஆசை தடைப்பட்டால் இக்குணம் எழுகின்றது. இப்பண்பு சிறுவர்களைவிட சிறுமிகளிடத்தே அதிகமாகக் காணப்பெறுகின்றது. - பொருமையைக் கிளப்பிவிடும் கிகழ்ச்சி சமூகம்பற்றியது; குழந்தை அதிகமாக அன்புகொள்ளும் மக்களே அங்கிகழ்ச்சியில் பங்கு பெறு பவர்கள். பொருமை நிலைமைக்குத் தக்கவாறு வடிவம் எடுக்கும். எதிராளியை நேரடியாகத் தாக்குவது, கிந்தித்தல், பிடிவாதம் ஆகியவை போன்ற வடிவங்களை அது எடுக்கலாம். சிலரிடம் அது துயிலில் சிறுநீர் கழித்தல், பெருவிரல் சுவைத்தல், உணவு உண்ண மறுத்தல் போன்ற குழக் தைச் செயல்களையும் உண்டாக்கலாம். சற்று வளர்ந்த குழந்தை களிடம் பொருமை ஏற்படுங்கால் வாய்ப்பேச்சுச் சண்டை, வீண்பேச்சு, கதைகட்டிவிடுதல், சினமூட்டும் குறிப்புக்களை வெளியிடுதல், எள்ளுதல், இகழ்தல், கலகம் மூட்டுதல் போன்ற செயல்களை அது விளைவிக்கும். சில சமயம் பகற்கனவு, தற்பெருமை, உதாசீனம், கிண்டல் பேச்சு போன்ற தூண்டல்களையும் சிலரிடம் உண்டாக்கக்கூடும். வேண்டுமென்றே ஒரு குழவியைப் பொருமைப்படச் செய்தல் அல்லது சினம் மூளச் செய்தல் ஒரு தீய செயலாகும். காரணங்கள் : பெரும்பாலும் பொருமை ஏற்படுவதற்கு வீட்டு நிகழ்ச்சியே காரணமாகின்றது. தாய் குழவிகளிடம் ಹQSTLD செலுத்து வதைத் தவிர்த்தால் குழந்தைகளிடம் பொருமை எழுகின்றது. அதிக 45 ourg sold-jealousy,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/381&oldid=778326" இலிருந்து மீள்விக்கப்பட்டது