பக்கம்:கல்வி உளவியல்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கல்வி உளவியல் மான செல்லம் கொடுக்கும் தாய்மார்களும் குழவிகளிடம் பொருமையை வளர்ப்பதற்குக் காரணமாகின்றனர். சில பெற்ருேர் குழவிகளை அடக்கு வதாலும், பாரபட்சம் காட்டுவதாலும் குழந்தைகளிடம் அத்தீய பண்பு ஏற்படுகின்றது. ஒரு குழந்தை தன்னுடைய தன்-மதிப்பை வளர்ப்பதாலும், மற்றக் குழவிகளின் நலனில் உண்மையான அக்கறை காட்டத்துண்டுவதாலும், பெற்ருேர் ஆசிரியர்களுடைய அன்பும் அக்கறையும் உறுதியாகத் தம் மிடம் இருப்பதாகக் குழவிகள் களிப்பதாலும் குழவிகளிடம் பொருமை உண்டாகின்றது. தடுக்கும் விதம் : பாரபட்சத்தை விலக்கவேண்டும். பெற்ருேரோ ஆசிரியரோ ஒரு குழவியைப் பிரத்தியேகமான அன்புடையவன் என்று ஏற்றுக்கொள்ளலாகாது. சிறுவர்களிடம் பாரபட்சம் காட்டுவது தீங்கு விளக்கும். ஒரு குழந்தையிடம் வெறுப்புக் காட்டுவதும், பிற குழவிகளை விட அது குறைவுள்ளது என்று உணரச் செய்வதும் அதை அடிப்பதை விடக் கேட்டினை விளைவிப்பவை. சில செயல்களில் ஏனையவர்களைவிட ஒரு குறிப்பிட்ட சிறுவன் மேம் பட்டவன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கும். மேல்வகுப்பு மாற்றம் செய்யும்பொழுதும், சில தனிப்பட்ட சலுகைகள் தர நேரும் பொழுதும் பிற சிறுவர்கட்குத் தங்கள் குறைகள் உணர்த்தப் பெறுகின் றன. ஒருவருடைய திறமையைக் குறித்துச் சரியான மதிப்பை அவர் அறியச் செய்வதும், அதைப்பற்றிச் சரியான மனப்பான்மையை அவரிடம் வளரச் செய்வதும் கல்வியின் முக்கிய நோக்கமாகும். தம்மால் செய்ய முடியாத செயல்களும் உள என்றும், அவற்றைச் செய்யக்கூடியவர்கள் பாற் பொருமை கொள்வதால் தமக்கு யாதொரு பயனும் இல்லையென்றும், அவ்வாறு கொள்வதால் தம்மிடம்அத்திறன் வளராது என்றும் அவர்கள் அறியச்செய்தல் வேண்டும். இங்ங்ணம் செய்தால், சிறுவர்களிடம் நல்ல மனப்பான்மை உண்டாகும். கூச்சம் (நாணும் தன்மை) கூச்சம் அல்லது பின்வாங்கும் நடத்தை, பல குழவிகளிடம் பல பருவங்களிலும் பலவிதமாகக் காணப்பெறுகின்றன. அன்ருட வாழ்க்கை யில் ஒரு குழந்தை தொடர்ந்து தோல்வியைக் காண்பதாலும், தன்னம் பிக்கைக் குன்றுவதாலும் கூச்சம் ஏற்படுகின்றது. கூச்சமுள்ள குழந்தை சாதாரணமாகத் தனிமையையே விரும்பும். - கூச்சம் hராss, பின்வாங்கும் withdrawing.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/382&oldid=778328" இலிருந்து மீள்விக்கப்பட்டது