பக்கம்:கல்வி உளவியல்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---------------- இயல்பு பிறழ்ந்த நடத்தை 361 கூச்சமுள்ள குழந்தையால் ஆசிரியருக்குத் தொல்லையொன்றும் நேரிடாவிடினும், அக் குழந்தை பாதுகாப்பின்மையாலும் தேவைக்குறை வாலும் சொல்லொணுத் துன்பத்தை அனுபவிக்கின்றது. அது பகற் கனவு காணும்; பிற குழந்தைகளுடன் கலந்து பழகாது; தன்னுடைய கனவுலகத்திலேயே வாழ விரும்பும். சமூக விரோதமான இந்தப் பண்பை முளையிலேயே கிள்ளாவிட்டால், அது ஸ்கிசபிரீனியா என்ற நோய்க்குக் காரணமாகிவிடும். கூச்சமுள்ள எல்லா குழந்தைகட்கும் உளநோய்கள் உண்டாகும் என்று சொல்லுவதற்கில்லை. எனினும், இக்குழந்தைகள் வளர்ந்தவர்களானவுடன் சமூகப் பொருத்தக் குறைபாடுகளை அடைவர் களாதலின், கூச்சத்தை இளமையிலேயே களைய முனையவேண்டும். துணை செய்யும் முறை : கூச்சமுள்ள சிறுவர்களே அவர்கள் ஆயத்தமாக இல்லாத சமூகச் செயல்களில் ஈடுபடும்படி கட்டாயப்படுத் தக்கூடாது. அங்ங்ணம் செய்தால், அச்சிறுவர்களிடமுள்ள உளச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்தக்கூடும். திறமையுள்ள ஆசிரியர் படிப்படியான ஏற்பாடுகளை அமைத்து அச்சிறுவர்கள் தாமாகவே பள்ளி வேலைகளிலும் சமூகச் செயல்களிலும் ஈடுபடும்படிச் செய்வார். கூச்சமுள்ள சிறுவன் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டால் அது ஒரு நல்ல தொடக்க மாகும். தானும் பிறருடைய மகிழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் தானும் ஒரு குழுவின் முக்கிய உறுப்பினன் என்றும் சிறுவன் தானகவே உணரும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பகற்கனவு காணமாட்டான்; ஒதுங்கிப் போகவும் செய்யான். இச்சிறுவனிடம் காணப்பெறும் தனித்திறமை யொன்றினைக் குழுச்செயலுக்குப் பயன்படச் செய்தால், அச்சிறுவனுக்குப் பிறருடைய பாராட்டுதல் கிடைக்கும் இந்த வெற்றியிஞல் அவன் நாளடைவில் படிப்படியாகக் கூச்சிமும் நீங்கி சமூகச் செயல்களுக்கு நன்கு பொருத்தமுறுவான். வெளித்தோற்றம் : அல்லது மேல்வேடம் ஒரு நாள் புதிதாக வந்த கணித ஆசிரியர் திரு. ப- எட்டாம் வகுப் பிற்குக் கணிதப் பாடம் நடத்த நேரிட்டது. அன்றுதான் அவர் முதன் முதலாக அவ் வகுப்பிற்குள் நுழைந்தார். முதலில் 'வருகைப்பதிவு' செய்ய நினைத்து ஒவ்வொரு மாளுக்கனையும் பெயர்கொண்டு அழைத்தார். எல்லாம் சரியாக நடைபெற்றது. துரைராஜ்' என்று கூப்பிட்டதும் வந்தது வினை. வளர்ந்த பையன் ஒருவன் எழுந்து புயங்களை முன்னும் &5Tş - sghizophfenia. »» Gsięñ# GšF¡5ãTshowing - off.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/383&oldid=778330" இலிருந்து மீள்விக்கப்பட்டது