பக்கம்:கல்வி உளவியல்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_இயல்பு பிறழ்ந்த நடத்தை 363 கருதுவதாகக் கூறினர். துரைராஜும் இது தகுந்த திட்டம் என்றுஒப்புக் கொண்டான். பிறகு ஆசிரியர் திரு ப-அத்திட்டத்தை ஆயத்தம் செய் யும்படியும், வருகிற வாரத்தில் வருகைப் பதிவு செய்யும் பொறுப்பை அவனை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். அவனும் அங்ங்ணம் செய்வதாக ஒப்புக்கொண்டான். அடுத்த நாள் வருகைப் பதிவு வேலையைத் துரைராஜ் மேற் கொண்டான். அவனுடைய நடத்தையில் வியத்தகு மாற்றம் காணப் பெற்றது. அதிலிருந்து துரைராஜ் உரத்து பேசுவதையே நிறுத்திக் கொண்டான்; ஒத்துழைக்கும் மாளுக்களுக மாறிவிட்டான். இது மாளுக்கனின் வெளித்தோற்றத்திற்கும் அதனை ஆசிரியர் சமாளிப்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். இம்மாதிரி நடத்தைக்குக் காரணம் அம்மாளுக்கனிடம் படிந்திருந்த தாழ்வுச் சிக்கலும்," தான் ஒதுக்கப்பெற்றதாகக் கருதுதலுமே. ஆசிரியர் துரைராஜுவினிடம் படிக் திருந்த இந்த இரண்டு மனப்போக்குகளையும் நீக்கிவிட்டதால், துரை ராஜூ இயல்பான மாளுக்களுகிவிட்டான். தாக்குங் தன்மை: 'குழந்தைகளுக்கும் அவர்களது நோக்கங்களுக்கும் இடையில் பிறரால், தனி மனிதனல் அல்லது சமூகத்தால் திணிக்கப்பெற்ற தடை களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பெறும் பிடிவாதமான துலங்கல்களே தாக்குத்தன்மையாகும்” என்று மர்பியும் அவரது தோழர்களும் வரையறை செய்துள்ளனர். இதிலிருந்து தாக்குங் தன்மை ஒரு பிறவிப் பண்பு அன்றென்றும், அஃது ஒரு நெருக்கடியைச் சமாளிக்க எழும் பண்பு என்றும் பெறப்படுகின்றது. ஒரு குழந்தையின் நோக்கத்திற்குத் தடையேற்பட்டாலும், அல்லது அக் குழந்தை அவமானப்படுத்தப்பெற்ரு லும், அல்லது அதற்குத் தோல்வியேற்பட்டாலும் அக்குழந்தையிடம் தாக்குக் தன்மை வெளிப்படலாம். தாக்குந்தன்மையில் இருவகையுண்டு. ஒன்று, குழந்தைகள் தம் முடைய தன்னம்பிக்கையால் வெளிக்காட்டுவது; இரண்டு, பாதுகாப் பின் மை உணர்ச்சியால் வெளிப்படுவது. இரண்டாவது வகையில், குழந்தைகள் தம்மை உலகம் வேண்டாம என்று சொல்வதாக உணர்வதால் உலகினைத் தாக்க கினைக்கின்றன; தம் முடைய தன்-மதிப்பை மீண்டும் பெறவேண்டுமென்று தன்னை விட இளை

  • 1 # Tģeļš Ràsé - inferiority complex. so žršsis zsirsmuo - aggressiveness.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/385&oldid=778334" இலிருந்து மீள்விக்கப்பட்டது