பக்கம்:கல்வி உளவியல்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 365. தாக்குங்தன்மைத் தூண்டல்கள் மனித குலத்திற்குக் கவலையையும் போராட்டத்தையும் கொடுக்கக்கூடியனவாக உள்ளன. இவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது எவரும் அறியாத புதிராக இருக்கின்றது. இவற்ருல் எவரும் இன்பம் அடைவதுமில்லை; இவையின் றி எவரும் உயிர் வாழவும் முடியாது. ஆனால், தாக்குந்தன்மையைத் தக்க முறையில் மடைமாற்றம் செய்வதால் (எ.டு. போட்டிப் பந்தயம், நாடகம் போன் றவை) கிறைந்த சமூக நன்மையைப் பெறலாம். ஒத்துழைப்பும் போட்டியும் இன்றைய நாகரிகம் தனித்தனி மக்கள் போட்டியிட்டு எவ்வா றேனும் உயர்ந்து வருவதனையே பாராட்டி வருகின்றது. பள்ளியிலும் இப் போட்டி கிலேயே குடிகொண்டுள்ளது. இங்கில மாறவேண்டுமென்பதே அறிஞருடைய விருப்பம். ஐந்து யாண்டிலிருந்து பத்துயாண்டு வயதுள்ள குழவிகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவைப் பழையபடி அடக்கி ஆளும் முறைவழியே பயிற்றியும் மற்ருெரு பிரிவினை உரிமையும் பொறுப்பும்பெற்று விளங்கும் குடியரசு முறைவழியே பயிற்றியும் சில அறிஞர் ஆய்ந்தனர். குடியரசுக் கல்வி முறையின் பயணுகக் குழவிகளி டையே மனத்திட்பம், ஒழுக்கமுறை முதலியன சிறந்து விளங்கினவாம்; கூட்டுறவும் தோழமையும் நிறைந்து ஒளிர்ந்தனவாம்; பகையும் போராட்ட மும் ஒரு சிறிதும் இடம்பெற வில்லையாம். அடக்கியாளும் கல்வி முறை யிலோ தாக்கலும் போராட்டமுமே எண் மடங்கு மிக்கு விளங்கினவாம்; ஒரு பாவமும் அறியார் மேலும், இந்தப் போராட்டம் பாய்ந்ததாம். போராட்டம் இல்லையானல் உலகில் ஒரு சுவையும் தோன்ற இடமின்றி இந்த முறையிற் பழகிய குழவிகள் இடர் உறுகின்றனவாம். தேர்தல் முறையே போட்டி முறையாகும். கல்வி பயிற்றுவதில் போட்டி முறையைக் கையாளுவதால் மெல்லக் கற்கும் குழவிகள் ஊக்கம் இழந்து மனம் குன்றிச் செயலற்று கிற்கின்றன. அல்லது, "எப்படியேனும் ஒழியட்டும், என் செய்வது” என வாளா கிடக்கின்றன. விரைந்து கற்கும் குழவிகள் தமக்கு உரியதல்லாத பெருமையைப் பெறு கின்றன. கல்வி முறைத் தேர்வில் தேர்ச்சி பெருத குழவி இப்படித்தான் நிற்கும் என உறுதி கூறுவதற்கில்லை. தோல்வி குழவியைப்பற்றிய ஒரு கீழ்மை உணர்வினையும், நில இழவினையும் குழவியின் உள்ளத்தே விளைவித்துவிடவும் கூடும். அப்பொழுது, குழவி தனக்குள்தானே சென்று ஒளித்துப் பகற்கனவு கண்டு களிக்கும்; நெறி பிறழ்ந்த நடத்தை யிலும் ஈடுபட நேரும். பிற்பாடான குழவிகள் எனப் பள்ளியில் இகழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/387&oldid=778338" இலிருந்து மீள்விக்கப்பட்டது