பக்கம்:கல்வி உளவியல்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கல்வி உளவியல் பெறுவன சமுதாயத்தில் பெருங்கேட்டினை விளைவிக்கும். உலகில் மனப் பாடம் செய்வதிலேயே பெருமை சிக்கிக்கிடக்கின்றது என்று யார்தான் சொல்லத் துணிவர்? எப்படியேனும் வகுப்பில் தம் நிலையைக் காத்து வருதல் வேண்டும் என்று முயன்றும், வெற்றிபெருவிடில் இழிபிறப்பாய் விடும் என்றும் நம்பப்புகுந்து பிறகு குழவிகளைப்பற்றிய கவலை என்பதே எள்ளளவும் இன்றி வாழும் போராட்டத்தையே காண்கின் ருேம். ஒத்துழையாமையே இத்தகைய பள்ளியில் வளரக்கூடும். ஒருவருக் கொருவர் போட்டி போடுவதால் ஐயங்களும், பொருமையும் எரிச்சலுமே விளைகின்றன. ஆரும் அத்தியாயத்தில் தன்ளுேக்க முறையைப்பற்றிக் கற்ருே மல்லவா? அதில் முன்னேற்பாடாகத் திட்டம் போட்டுக் குழவிகளே கூட்டுறவாக ஆசிரியர்களின் கண்காணிப்பில் பயின்று வருவதைக் கண் டோம். இதில் குழவிகள் செய்யவோ ஆராயவோ முயலப்போவதனை முன்னதாகவே அவையனைத்தும் ஒன்று சேர்த்து வரையறைப்படுத்திக் கொண்டு உறுதியுடன் உழைக்க முந்துகின்றன. செய்யப்போவதற்கு ஏற்ற திட்டங்களை வரையறுப்பதிலும் அவை அனைத்தும் ஒத்துழைக் கின்றன. அதனை முடிப்பதற்கென எழும் பொறுப்பிலும் அவை அனைத் தும் பங்கு கொள்ளுகின்றன. தோல்வியோ வெற்றியோ அவை அனைத் திற்குமே ஏற்படும் என்பதில் அக் குழவிகளிடையே ஐயம் ஒன்றும் எழுவ தில்லை. - - இதிலிருந்து கூட்டுறவை வளர்க்கும் கல்வி முறையே சிறந்தது என்பது குன்றின் மேலிட்ட விளக்காகும். குழவிகளிடையே தக்க தொரு நோக்கத்தைத் தூண்டி எழுப்புதல் வேண்டும். அதற்கு ஏற்ற ஒரு வழியினையும் குழவி காணுமாறு செய்தல் வேண்டும். அதனைப் பின்னும் முயலவேண்டிய ஓர் ஊக்க நிலையையும் கிளர்ந்து ஓங்கச் செய் தல் வேண்டும். இங்கிலைகளில் எல்லாம் மாளுக்கர்களிடையேயும் ஆசிரியர்-மாளுக்கரிடையேயும் உள்ளக் கிளர்ச்சியைப்பற்றி நெருக்கடி ஒன்றும் நேராதவாறு காத்தல் வேண்டும். இவற்றிற்கெல்லாம் தக்க பழக்க வழக்கங்களை எழுப்பி வகை செய்து விடுவதே ஆசிரியக் கலையின் அருந்திறனுகும். இத்தகைய அமைதி நிலை ஏற்படாதபொழுது குழவிக வளிடையே கொந்தளிப்பையே காண்கின்ருேம். எதிர்ப்பும் கலகமுமே மன நிலை அளவிலோ, அன்றி வெளிச் செயலிலோ தோன்றி விடுகின்றன. அக் கறை சிறிதுமே இன்றிக் கல்வியைப்பற்றிக் கவலை கொள்ளாத கிலேயும் குழவியின் மனத்தே எழும். தன்-முயற்சி என்பது சிறிதும் இல்லாமற் போகும். உள்ளுற அன்றிப் புறத் தோற்றத்தளவில் மட்டும் ஒழுங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/388&oldid=778340" இலிருந்து மீள்விக்கப்பட்டது