பக்கம்:கல்வி உளவியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கல்வி உளவியல் கள் ஆகியவற்றைப்பற்றிய ஆலோசனை கூறவும் நிபுணரைக் கலந்து கொள்ளலாம். (iii) வாழ்க்கை வரலாற்று முறை : குழந்தை பிறந்ததுமுதல் அதன் வரலாற்றை எழுதிப் பயன்படுத்துவதுண்டு. மேனுட்டார் தங்கள் வீட்டுக் குழந்தைகளின் வரலாற்றைப்பற்றிப் பிறந்தது முதல் எழுதி வெளி விட்டுள்ளனர். என் செல்வமே, என் கண்மணியே என்று கொண் டாடும் பெற்றேரின் கண்ணுக்கு உண்மை உள்ளவாறு புலளுதல் அருமை யினும் அருமை. அன்றியும், குழந்தைகளின் நடத்தைகளில் பல தங் களுக்கு விளங்காமையால் அவற்றைப்பற்றி ஒன்றும் எழுதாமலே அவர்கள் விட்டுவிடுவது முண்டு. பெரியோர்களின் வரலாறும் இங் ங்ணம் எழுதப்பெறுகின்றது. இந்த வரலாறுகளினின்று மக்களின் உண்மைத் தன்மைகளையும் அவர்களுடைய எண்ணங்களையும் அறிய 5\} frus), இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இவ் வரலாறுகளைக் கொண்டு எழுதப் பெற்ற உளவியல் ஆராய்ச்சி. மேடுைகளில் நூற்றுக் கணக் கான மேதைகளின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்டு-முக்கியமாக அவர்கள் சிறுவயதில் இயற்றிய கவிதைகள், படிக்கத் தொடங்கின வயது முதலியவற்றைச்-சாதாரணக் குழந்தைகளின் செயல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். இத்தகைய சிக்கலானதொரு முறையினை மேற் கொண்டு அவர்கள் உலகோர் மேதையர் என்று புகழ்ந்த சுமார் 309 பெருமக்களின் அறிதிறனை மதிப்பிட்டுள்ளனர். இவ் வாராய்ச்சியின் மூலம் அவர்கள் காட்டிய உண்மை ஒன்று உண்டு. உலகினர் மேதை என்று புகழும் மகன் சிறு வயதிலேயே தன் மேம்பாட்டைக் காட்டுகின்றன் என்பது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது நம் காட்டுப் பழமொழியன் ருே ? இப் பழமொழியிலும் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் சாயல் புலகிைன்றது. மருத்துவ நிலைய முறை : இம் முறை உளவியல் வளர்ச்சியில் கண்டறியப்பெற்ற புதிய கவர்ச்சிகளுள் ஒன்று. இம் முறை மருத்து வத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதில் உளவியலின் கொள்கைகள், முறை வகைகள் முதலியவற்றைத் தனிமனிதனின் கல வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் சாத்திரமும் சிறப்பு முறையும் அடங்கி யுள்ளன. .

    • argãos surrorism pop—biographical method. sa tegššiai flådugpop - Glinical method.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/39&oldid=778343" இலிருந்து மீள்விக்கப்பட்டது