பக்கம்:கல்வி உளவியல்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 369 ാട് சமாளிக்கச் செய்கின்றது. பற்றுக்களும் மனநிலைகளும் ஒரு பற்றின் கீழ் அமைந்த அவற்றின் ஒழுங்கான அமைப்புமே இந்தச் செயலாண்மையில் அடங்கிய கூறுகளாகும். எனவே, ஒழுக்கம் என்பது இயல்பாகவுள்ள மனநிலை, மீப்பண்பு ஆகியவற்றின் அடிப்படை யில் அமைந்த பயின்ற போக்குகள் ஆகும்; நம்முடைய பற்றுக்களும் பழக்கங்களும் அதனுள் அடங்குகின்றன. சுருங்கக் கூறின், அறிதிறன் வழி காட்டியாக அமைய, இயல்பான மன நிலைகள் பெளதிகச் சூழ்நிலை யுடனும், சமூகச் சூழ்நிலையுடனும் இடைவினை இயற்றுவதால் ஏற்படும் விளைவே ஒழுக்கம் என்பது. பற்றுக்களே ஒழுக்கத்தின் அடிப்படைக ளாக அமைகின்றன. பயிற்றும் ஆசிரியர் பாடத்திட்டம், பாடவேளைப் பட்டி, தேர்வு கள், நூலகங்கள், பொருட்காட்சிச் சாலை முதலியவற்றைக் கவனிக்க வேண்டும் என்ருலும், நவீன கல்வி முறையில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது குழந்தைகளின் ஒழுக்கமேயாகும். கல்வி என்பது மாளுக்கர்களின் முழு மனிதத் தன்மையை-ஆளுமையைமலரச் செய்வது அன்ருே? பயிற்றலின் கோக்கமும் அஃதாகத்தானே இருக்கவேண்டும்? மாணுக்கர்களிடம் இயல்பாகத் தோன்றும் மனப் போக்குகளை மானிட சமூகத்திற்கேற்றவாறு வளர்த்தலே பயிற்ற லாகும். பயிற்றல் நன்முறையில் அமைந்தால் ஒழுக்கமும் நன்முறை யில் அமையும். பற்றுக்கள் இனி, ஒழுக்கத்தின் அடிப்படையாகவுள்ள பற்றுக்களைச் சிறிது ஆராய்வோம். வாழ்க்கை அனுபவத்தில் உள்ளக் கிளர்ச்சிகள் பல பொருள்களைச் சுற்றி அமைகின்றன. பின்னர் அப்பொருளோ அல்லது அதனைப் பற்றிய எண்ணமோ எழுந்தால் இவ்வுள்ளக் கிளர்ச்சியின் சேர்க்கை முழு மையும் தூண்டப்பெறுகின்றது. உள்ளக் கிளர்ச்சியின் சேர்க்கையையே பற்று என்று காம் வழங்குகின்ருேம். பற்றுக்கள் கருத்து, மனிதர்,பள்ளி போன்ற கிலேயங்கள், பொருள்-இவற்றுள் ஒன்றினைச் சுற்றி அமையும். மிக இளமைக் காலத்திலேயே சிறுவன் தன் அன்னையைப்பற்றிப் பல உள்ளக் கிளர்ச்சிகளையுடையவனுக இருக்கின்றன். அன்னை உண வூட்டும்பொழுதும், சீராட்டிப் பாராட்டும்பொழுதும் மகிழ்கின் ருன் ; அவள் கடிந்துகொள்ளும்பொழுதும் ஒறுக்கும்பொழுதும் சினம் கொள் * Losop ouráðssir - acquired tendencies. 4 Hop - sentiment. க.உ.24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/391&oldid=778347" இலிருந்து மீள்விக்கப்பட்டது