பக்கம்:கல்வி உளவியல்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 371 காட்சிச் சிறப்பு, காட்சிப் பொது, கருத்து என்ற ஒழுங்கில் வளர்வதாகக் *அகின்ருர் ஒரு சிறுவன் தான் வாழும் சூழ்நிலையில் உள்ள குறிப்பிட்ட கே'து அன்பு செலுத்துகின்றன்; இங்கு அச் சிறுவனின் அன்பு என் அம் பற்று காட்சிச் சிறப்புப் பற்ருக அமைகின்றது. பிறகு இவரைப் போன்ற பலரிடமும் அன்பு செலுத்துகின்றன்; இப்பொழுது அப் பற்று 'காட்சிப் பொதுப் பற்ருக அமைகின்றது. இறுதியாக, அச்சிறுவன் அம் மாந்தர் அனைவரும் பின்பற்றும் பண்பின் மீது அன்பு செலுத்துகின்ருன்; இப்பொழுது அப்பற்று கருத்துப் பொருள் பற்ருக அமைந்து விடுகின்றது. அச்சிறுவன் துணிவான ஒருவரை விரும்பலாம்; பிறகு துணிவானவர்கள் அனைவரையும் விரும்புவான்; இறுதியாகத் துணிவு என்பதையே விரும் பும் கிலே அவனிடம் அமைந்து விடுகின்றது. அறப் பற்றுக்கள் எங்ங்ணம் அமைகின்றன என்பதை ஆசிரியர்கள் கன்கு உணர்ந்து அதற்கேற்பக் குழந்தை வாழும் சூழ்நிலையை நற்பண்பு களின் எடுத்துக்காட்டுக்களால் நிரப்பவேண்டும். குழந்தை இளங்குமரப் பருவத்தை எய்தியதும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணும் குறிக் கோள் மாந்தர்களை அவனுக்கு இலக்காக வைக்கலாம். இராமன், பரதன், இலக்குவன் போன்ற காவிய மாந்தர்களையும், பெரிய புராணத்தில் காணும் பல நாயன்மார்களையும் இன்னும் இவர்கள் போன்ற பலரையும் குறிக்கோள் மாந்தர்களாகக் கருதலாம். புத்தருடைய வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையாகும். நம்முடைய நாட்டுத் தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையும் அத்தகையதே. இத்தகைய அறப் பற்றுக்களைப் பெற்று, அவற்றை நன்கு சிந்தித்து, அவற்றைத் தற்பற்றினுள்" அடக்கி யமைப்பதே அறத்துறைப் பண் பாடென்பது. நன்மை, உண்மை, தூய்மை ஆகியவற்றை காம் விரும்பு பவர்களாக நம்மை நாம் கருதினால், இப்பண்புகள் நம்முடைய அன்ருட வாழ்க்கையில் தலை காட்டும். இவற்றை ஆராயுங்கால் அடை நிலைக்கும் அவா கிலேக்கும் உள்ள வேற்றுமையை நினைவுகூர்தல் இன்றியமையா தது. உண்மையில், என்னிடமுள்ள எல்லாப் பற்றுக்களும் என்னுடைய தற்பற்றைச்சுற்றிலும் அமைகின்றன. என்னிடம் உண்மையில் உறுதியாக இல்லாத, ஆளுல் நான் அவாவி கிற்கும், பற்றுக்கள் யாவை? இத்தகைய பற்றுக்கள்தாம் குறிக்கோள்கள்'; இவற்றைத் தழுவிக்கொண்டு கிற்கும் 'தான்” என்பதை நாம் கருதலாம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இந்தத் 'தான்’ என்பதை விரும்புகின்ருேமோ அவ்வளவுக்கவ்வளவு அதனை y spuig - self-sentiment. o gióáGs sir - ideal.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/393&oldid=778351" இலிருந்து மீள்விக்கப்பட்டது